உலகின் கவனத்துக்குரிய ஊடகங்களில் ஒன்றான ‘பிபிசி’-யின் ’2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்கள்’ பட்டியலில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ’தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ குழுவைச் சேர்ந்த கானா பாடகர் இசைவாணி இடம்பிடித்திருக்கிறார்.
பி.பி.சி.,’100 பெண்கள்’ என்ற தலைப்பில், சவால்களை தகர்த்தெறிந்த, 100 பெண்களின் பட்டியலை,2013 முதல் வெளியிட்டு வருகிறது.
சமூகம் சார்ந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு துணையாக உள்ள பெண்களை கவுரவப்படுத்தும் நோக்கில், இப்பட்டியல் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் இசைக்குழுவான, ‘கேஸ்ட்லெஸ்கலெக்டிவ்’
பாடகி, வடசென்னையை சேர்ந்த இசைவாணி என்பவர், இந்தாண்டிற்கான சிறந்த, 100 பெண்கள் பட்டியலில்,
இடம்பிடித்து தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளார்.
ப்ளஸ் டூ-வோடு படிப்பை நிறுத்திய இசைவாணி, இன்று பிபிசியின் சிறந்தபெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் கலையுலகை உற்றுநோக்க வைத்திருக்கிறது.
இந்த வருடம் பிபிசி சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த 100 பெண்களில் 4 பேர் இந்திய பெண்கள். அதில், இசைவாணி ஒரே தமிழகப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் அறிவாற்றல், படைப்பாற்றல், தலைமைத்துவம், அடையாளம் ஆகிய பிரிவுகளில், படைப்பாற்றல் பிரிவில் இடம்பிடித்த 21 பெண்களில் இசைவாணி மட்டுமே இந்தியர். பருவநிலை செயற்பாட்டாளர் ரிதிமா பாண்டே, தடகள வீராங்கனை மானஷி ஜோஷி, வயதான போராளி பில்கிஸ் பானோ என மற்ற மூவரும் வெவ்வேறு துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இசைவாணி, கானா பாடல்கள்மூலம் கவனத்தை ஈர்த்தவர். கானாவை, ஆண்கள் மட்டுமேபாட வேண்டும் என்ற முறையை உடைத்து, தனக்கென தனி இடத்தை பிடித்து உள்ளார்.