கேரளா, கோழிக்கோட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் 50 வயது விஜி பிபிசியின் அதிகாரமிக்க 100 பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

டெய்லராக இருந்து சமூக ஆர்வலராக மாறிய விஜி, தான் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் கழிவறை எங்கே என்று கேட்டபோது கிடைத்த பதில்

என்ன கழிவறையா? அதெல்லாம் கிடையாது. தண்ணீரைக் குறைவாகக் குடியுங்கள் அல்லது டியூப் பயன்படுத்துங்கள் என்பது தான்.

2009 – 2010 ஆம் ஆண்டுகளில் கேரளாவில் எஸ்எம் சாலையில் உள்ள நிறுவனங்கள் அனைத்திலும் இதுதான் நிலை. ஏராளமான போராட்டங்கள், வேலை நிறுத்தம் என 8 ஆண்டுகள் நீடித்த போராட்டத்தின் இறுதியாக அவரது கோரிக்கை 2018ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் விஜி சர்வதேச அளவில் அறியப்பட்ட பெண்களில் ஒருவரானார்.

இதன் காரணமாகத்தாக பிபிசி தனது அதிகாரமிக்க 100 பெண்மணிகளின் பட்டியலில் விஜியை இணைத்தது. விஜிக்கு 73வது இடம் கிடைத்துள்ளது.

பொறுப்பில்லாத தந்தை, கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் தாய் பட்ட கஷ்டங்கள் அனைத்துமே விஜியை பிற்காலத்தில் சமூகப் போராளியாக மாற்றியது.

5

கழிவறை இல்லாததால் எஸ்எம் சாலையில் பணியாற்றும் ஏராளமான பெண்கள் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு கஷ்டப்பட்டனர். அவர்கள் துயரப்படுவதைப் பார்த்த விஜி கழிவறைக் கட்டுமாறு வலியுறுத்தி போராட்டத்தைத் தொடங்கினார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கே வெற்றி கிடைத்தது .

விஜியும் , மற்ற பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்ட போது , அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு உறுப்பினர்களாக அவர்கள் இல்லை ஆதலால் அவர்கள் போராட்டம் நடத்த முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதன்பிறகு விஜியும் மற்ற பெண்களும் இணைந்து பெண்கூட்டு என்ற அமைப்பை ஆரம்பித்தனர். ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகள், முக்கிய தொழிற்சங்கங்களால் புறக்கணிக்கப்பட்டன அந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி இந்த பெண்கூட்டு அமைப்பு போராட ஆரம்பித்தது .

இந்த தொழிற்சங்கங்கள் பெண்கூட்டு அமைப்புக்கு எந்த பிரச்சனையும் கொடுக்கவில்லை. ஆனால் அவர்கள் எங்களை புறக்கணித்தார்கள் . 2011 ஆம் ஆண்டு அசான்கடித்தா மகிளா தொழிலாளி யூனியன் என்ற அமைப்பை தொடங்கினோம். இது கேரளாவில் ஆரம்பிக்கப்ப்ப்ட்ட பெண்களுக்கான முதல் தொழிற்சங்கம்.

கடைகளில் வேலைப்பார்க்கும் பெண்கள் நின்றுக் கொண்டே வேலை பார்க்க வேண்டும் .உட்காரவே கூடாது இதனை எதிர்த்து விஜி 2014 ஆம் ஆண்டு போராடினார். இந்த போராட்டமானது மாநில முழுவதும் மிக வேகமாக பரவியதை முன்னிட்டு நின்றுக் கொண்டே வேலைப்பார்க்கும் பெண்களுக்கு நியாயம் கிடைத்தது .

உங்களது போராட்டங்கள் முடிந்துவிட்டனவா? அடுத்து என்ன? என்றக் கேள்விக்கு அவரிடம் இருந்து சட்டென்று வரும் பதில்.. “இல்லை. ஆண்களுக்கு இணையாக பெண்களையும் பார்க்க வேண்டும். சமமான ஊதியம், சமமான பணிநேரமே அடுத்த இலக்கு” என்கிறார் அவர் உறுதியாக.

Courtesy : The new Indian Express