‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு டி காப்ரியோ ஆதரவு அளித்தது தொடர்பாக சுற்றுச்சூழல் அமைப்பு அவருக்கு கடிதம் எழுதியுள்ளது. 

காவிரி நதிக்கரை முழுவழும் மரக்கன்றுகள் நடப் போவதாக அறிவித்துள்ள ஜகி வாசுதேவ் அதற்காக ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தையும் தொடங்கினார். இந்தக் காவேரி கூக்குரல் இயக்குத்துக்கு பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மற்றும் தமிழக அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த இயக்கத்திற்கு டைட்டானிக் புகழ் நாயகன் லியானார்டோ டி காப்ரியோ ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பெரும்பாலான நதிகள் அழியும் தருவாயில் இருப்பதாகவும் காவிரி நதிக்காக போராடிவரும் ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் உடன் தாமும் கைகோத்திருப்பதாக ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி காப்ரியோ தமது முகநூலில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் இதுதொடர்பாக லியானார்டோ டி காப்ரியோவிற்கு  சுற்றுச் சூழல் அமைப்பு ஒன்று கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதத்திற்கு 95 நிறுவனங்கள் ஆதரவு அளித்துள்ளன. இந்தக் கடிதத்தில், “நீங்கள் காவிரி கூக்குரல் தொடர்பான இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் போது போதிய புரிதல் இல்லாமல் ஆதரவு அளித்திருப்பீர்கள் என நினைக்கிறோம். அத்துடன் இந்த விவகாரத்தின் பின்னணியை ஆராயாமல் நீங்கள் ஆதரவு அளித்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் கொடுத்த ஆதரவில் இரண்டாவது பாதியை திரும்ப பெற நாங்கள் வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

India’s rivers are severely endangered with many of its smaller rivers vanishing. Join Sadhguru and the Isha Foundation…

Leonardo DiCaprio यांनी वर पोस्ट केले शनिवार, २१ सप्टेंबर, २०१९

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here