பின்னடைவைச் சந்திக்கும்’தர்பார், பட்டாஸ்’வசூல் ?

0
248

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் தர்பார் கடந்த 9ஆம் தேதி வெளியானது. அதேபோல் பொங்கலையொட்டி தனுஷின் பட்டாஸ், அறிவிக்கப்பட்ட தேதியான 16 ஆம் தேதிக்கும் பதிலாக ஒரு நாள் முன்னதாக வெளியானது.

இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று பல தியேட்டர்களில் பொங்கலுக்கு வெளிவந்த இரண்டு படங்களான ‘தர்பார் மற்றும் பட்டாஸ்’ ஆகிய படங்களின் வசூல் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பல தியேட்டர்களில் 10 டிக்கெட்டுகள் கூட முன்பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்றுடன் அந்த இரண்டு படங்களுக்கான வசூல் முடிவடைந்துவிட்டதாகவே தவல்கள் தெரிவிக்கின்றன.

‘தர்பார்’ படம் 11 நாட்களையும், ‘பட்டாஸ்’ படம் 5 நாட்களையும் கடந்துவிட்டன. இனி வரும் நாட்களில் இந்தப் படங்களுக்கு எதிர்பார்க்கும் கூட்டம் வருமா என்பது சந்தேகமே. ‘தர்பார்’ படம் நல்ல வசூலை ஈட்டியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,’பட்டாஸ்’ படம் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தைக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here