முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மூன்று மாதத்தில் கவிழ்ந்து விடும் என ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் ஆர்கே நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன், மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி வருகிறார். அப்போது பேசிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக திமுக தொடர்ந்துள்ள வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மூன்று மாதத்தில் கவிழ்ந்து விடும் என்றார்.

மேலும் அவர், தனது வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாததால் எடப்பாடி பழனிசாமி அரசு ஆர்கே நகர் தொகுதிக்கான மக்கள் நலத்திட்டங்களை முடக்கி வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி பிரச்சனையைத் தீர்க்க முடியாமல் மத்திய பாரதிய ஜனதா அரசின் கிளை அலுவலகமாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்