DfGo6RhW4AABFiE

அக்டோபர் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருந்தாலும், அதற்கு முன்பாகவே வரவிருக்கும் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் பற்றிய வதந்திகள் முன்னெப்போதையும் விட வேகமாகவே வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

DfZ0N9VWAAEG2BV

கடந்த ஆண்டு கூகிள்(Google) HTC இன் ஸ்மார்ட்போன் பிரிவைக் கையகப்படுத்தியதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் HTC – ன் நிபுணத்துவத்தை நிறைய பார்க்க முடிகிறது. கூகுள் இதுவரை அதன் நெக்ஸஸ் மற்றும் பிக்சல் சாதனங்களை உருவாக்க பல்வேறு OEM களுடன் இணைந்தது. இந்த ஆண்டு Google, தன் சொந்த வன்பொருள்(hardware division) பிரிவை ஆரம்பித்த காரணத்தால் பிக்சல் 3 அவர்களது வன்பொருள்(hardware division)பிரிவிலேயே தயாரிக்கப்படும் என எதிர் பார்க்கலாம்.

அந்த எதிர்பார்ப்புக்கு இணங்க, ப்ளூம்பெர்க்கின் மிக சமீபத்திய அறிக்கையானது “ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை உருவாக்க பக்கத்துணையாக இருக்கும் ஃபாக்ச்கான் நிறுவனம் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களையும் தயாரிக்கலாம் என்று தெரிவிக்கிறது.

இங்கே பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 எக்ஸ்எல் ஆகியவற்றின் வ்ன்பொருள் மற்றும் மென்பொருளின் ஒவ்வொரு அம்சத்தையும் இதுவரை வந்த ஊகம் மற்றும் வதந்திகளின் அடிப்படையில் எடுத்துக் கூறுகிறோம்.

கூகுள் பிக்சல் 3 எக்ஸ்எல் (Google Pixel 3 XL) ஸ்மார்ட்போனில் நாட்ச் ரக டிஸ்ப்ளே, டூயல் செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்(Snapdragon 845 SoC ), 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கிறது.

கிளாஸ் பேக் கொண்ட பிக்சல் 3 எக்ஸ்எல் (Google Pixel 3 XL) ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூகுள் நிறுவனம் சிங்கிள் கேமராவையே வழங்கியிருக்கிறது.

வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் முந்தைய பிக்சல் 2 எக்ஸ்எல் (Google Pixel 2 XL) ஸ்மார்ட்போன்களை போன்றே வழங்கப்பட்டிருக்கிறது. இதன் கைரேகை சென்சார் பின்புறமும், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 6-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் நாட்ச் ரக வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

அண்மையில் வெளியான அறிக்கையின்படி, Google நிறுவனம் ஆப்பிள் ஐபோன் எக்ஸில் காணப்படும் 3D ஃபேஸ் ஐடி ஸ்கேனிங்( 3D scanning Face ID) அம்சத்துடன் போட்டியிடக்கூடிய ஐரிஸ் ஸ்கேனர்( iris scanner ) ஒன்றை உருவாக்கி இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

DfK6xR7VMAAueN9

நம்மூரில் இதன் விலை ரூ 79,990/- ஆக இருக்கு எனத் தெரிகிறது.

detail

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்