‘பிகில்’ மோதிரம் – 400 பேருக்கு விஜய் கொடுத்த அன்பு பரிசு

0
201

‘பிகில்’ படத்தில் தன்னுடன் பணியாற்றிய 400 பேருக்கு  நடிகர் விஜய் தங்கமோதிரம் பரிசு வழங்கியுள்ளார். 

இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சிங்கப்பெண்ணே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.  

இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதிக்குள் முழுவதுமாக முடிவடையும் எனக் கூறப்படுகிறது. இதனால் முழு வேகத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்துள்ளது.

இதனால் படத்தில் தன்னுடன் பணியாற்றியர்களுக்கு நடிகர் விஜய் பரிசு வழங்கியுள்ளார். மேலும் கால்பந்து வீரர்களாக நடித்த நடிகர்களுக்கு தன் கையொப்பமிட்ட கால்பந்தையும் விஜய் பரிசாக வழங்கியுள்ளார்.

‘பிகில்’ எனப் பொறிக்கப்பட்ட தங்க மோதிரத்தை சுமார் 400 பேருக்கு விஜய் வழங்கியுள்ளார். நடிகர்கள் பலரும் விஜய் வழங்கிய மோதிரத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.