பிகில் தமிழ்நாடு வசூல் மட்டும் ரூ100 கோடிக்கும் மேல் – திரையரங்க உரிமையை வாங்கிய ஸ்கிரீன் சீன் மீடியா

0
446

அட்லி இயக்கத்தில் விஜய்  நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது பிகில் . உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்துள்ளது. இந்த நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் கொடுத்துள்ளது என்று ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளருமான சுந்தர் ஆறுமுகம்   தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பிகில் படத்தின் திரையரங்க உரிமையை நேரடியாக வாங்கி அதனை விநியோகஸ்தர்களுக்கு விற்றேன். ஆனால், அவர்களுக்கு லாபம் பெரிதாக இருக்காது என்று எண்ணினேன். உரிமையை விற்றதோடு எனது வேலை முடிந்தது. இப்படத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டாலும் அது அவர்களுக்குத்தான், லாபம் ஏற்பட்டாலும் அது அவர்களுக்குத்தான்.

எனினும், பிகில் படம் தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்திலேயே  ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை ஈட்டியுள்ளது என்று தெ ஹிந்து ஆங்கிலம் நாளிதழிடம் கூறியுள்ளார் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here