சோனி நிறுவனத்தின் புகழ்பெற்ற பிஎஸ் 4 வீடியோகேம் சாதனத்தின் தயாரிப்பு விரைவில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனி நிறுவனத்தின் இன்ட்ராக்டிவ் என்டர்டெயின்மென்ட் பிரிவின் முதலீட்டாளர்கள் சந்திப்பு (investor relations day) சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்விலேயே இது குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது.

சோனி நிறுவனம் புகழ்பெற்ற பிளே ஸ்டேஷன் 4 (பிஎஸ் 4) விளையாட்டுக் கருவியை 2013ல் வெளியிட்டது. இதுவரை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 70 மில்லியன் பிஎஸ் 4 விற்றுத்தீர்ந்துள்ளன. இன்னும் அதற்கான வரவேற்பு இருப்பதால் அவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சோனி நிறுவனம் தன் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதனால் பிஎஸ் 4 பதிலாக அதன் இடத்தை நிரப்ப புதிய கருவியைக் கொண்டு வர இருக்கிறது. பிஎஸ் 4 அதன் இறுதிநாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றே கூற வேண்டும். 2021ம் ஆண்டு வரை சோனி பிளே ஸ்டேஷன் வளர்ச்சி சற்று மந்தமாகவே இருக்கும் என்று தெரிகிறது.

ஏற்கனவே சோனியின் பிஎஸ் 5 ரிலீஸ் குறித்து வலைத் தளங்களில் பல்வேறு வதந்திகள் உலா வரும் நிலையில் பிஎஸ் 5 குறித்து ரசிகர்கள்களிடையே உள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here