4ஜி சேவை உரிமம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(திங்கள்கிழமை) பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 1.76 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர். இது குறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் கே.நடராஜன் பேசிய போது: பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும். இந்த நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திங்கள்கிழமை(பிப்.18) முதல் புதன்கிழமை (பிப்.20) வரை நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 4ஜி உரிமம் தொடர்பாக ட்ராய்க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக முக்கியமான நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என தனது ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. போராட்டம் காரணமாக சேவை பாதிக்கப்பட்டால், வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here