பிஎம்டபிள்யூ இந்தியா தனது 3 சீரிஸ் கிராண் டூரிஸ்மோ ஸ்போர்ட் காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கார் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினோடு அதிவேகத்திறன் கொண்டதாகவும் அதிக சொகுசு உடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் டாப் எண்ட் ஸ்போர்ட் மாடல், ரூபாய் 51.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் எல்இடி விளக்குகள், 10.5 இன்ச் டிஸ்பிளே ஆடியோ இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், மர வேலைப்பாடுகள் கொண்ட இண்டீரியர்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

18 இன்ச் அலாய் வீல், மெட்டலிக் கலரில் இந்த கார் வெளியாகியுள்ளது. இந்த காரின் இன்ஜின் 1995 சிசி கொண்டதாகவும், 190 பிஎச்பி திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

2500 ஆர்பிஎம்மில் 400 Nm டார்க்கை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 ஸ்பீட் ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஸன் கியர் பாக்ஸ் கொண்ட இந்த கார், 0 – 100 கிமீ வேகத்தை 7.7 நொடிகளில் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிராண் டூரிஸ்மோ காரில் கம்போர்ட், எக்கோப்ரோ, ஸ்போர்ட், ஸ்போர்ட் ப்ளஸ் என நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய மார்க்கெட்டில் இந்த காரின் விலை ரூ.46.60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்