பிஎம்சி வங்கி நடவடிக்கைகளை முடக்கிய ரிசர்வ் வங்கி; ரூ1000 மட்டுமே எடுக்க மக்களுக்கு அனுமதி

0
418

பஞ்சாப் & மும்பை கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகளில் ரிசர்வ் வங்கி விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 கடனை புதுப்பிக்க கூடாது, புதியதாக டெபாசிட் பெறக்கூடாது, முதலீடு செய்யக்கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

பஞ்சாப் & மும்பை கூட்டுறவு வங்கி நாட்டின் சிறந்த 10 கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு இந்த வங்கியின் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்திலும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொது மேலாளார் யோகேஷ் தயாள் இது பற்றி கூறும்போது, “இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு அல்லது பிற டெபாசிட் கணக்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் கணக்கிலிருந்து 1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது.” எனத் தெரிவித்தார்.

1984ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட இந்த வங்கி மகாராஷ்டிரா, டெல்லி, கர்னாடகா, கோவா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் 137 கிளைகளைக் கொண்டிருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் வாராக்கடன் அதிகரிப்பு என்று ஒரு காரணம் கூறப்பட்டாலும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை இவ்வங்கி மீறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டதாகவும் ஆர்.பி.ஐ தரப்பில் கூறப்படுகிறது.

பி.எம்.சி வங்கியின் வாராக்கடன் அதிகரித்துள்ளது, மேலும் இவ்வங்கியின் சொத்தின் தரம் குறைந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்றும், குறிப்பாக மொத்த வாராக்கடன் கடந்த ஆண்டில் 3.76 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டில் 1.99 சதவீதமாக மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் மொத்த வாராக்கடன் மதிப்பு 2.19 சதவீதம் ஒரே வருடத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 2017 – 2018இல் 148 கோடி ரூபாயாக இருந்த வாராக்கடன் , 2018 – 2019இல் 315.24 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here