பா.ஜ.க மத்திய மந்திரி பேர் இருக்குதாமே; அது என்னங்க பாரடைஸ் பேப்பர்ஸ்?

சொந்த நாட்டுக்கு வரி கட்டாமல் வேறு நாடுகளில் பணம் பதுக்கியவர்களின் பட்டியல்.

0
299
சொந்த நாட்டுக்கு வரி கட்டாமல் பணத்தைப் பதுக்கியவர்களைப் பட்டியலிடுகிறது பாரடைஸ் பேப்பர்ஸ்.

1.Paradise Papers (பாரடைஸ் பேப்பர்ஸ்) என்று செய்தியில் சொல்லப்படுவதை விளக்க முடியுமா?

இப்போது: இதில் பாரடைஸ் அல்லது சொர்க்கம் எனக் குறிக்கப்படுவது, பெரும் பணத்தை எந்த வரியும் இல்லாமலோ அல்லது குறைந்த வரியில் ரகசியமாக பதுக்குவதற்கு அனுமதிக்கும் நாடுகள் அல்லது மாகாணங்களாகும். பெரும் வணிக நிறுவனங்களும் பெரும் செல்வந்தர்களும் சொந்த நாடுகளுக்கு வரி செலுத்தாமல் இந்தச் சொர்க்கங்களில் பெரும் பணத்தைப் பதுக்கி வைக்கிறார்கள். கேமன் தீவு, லிச்ஸ்டன்ஸ்டெய்ன், மனாகோ, இங்கிலாந்திலுள்ள ஜெர்சி, கெர்ன்சே, பெர்முடா, அமெரிக்காவிலுள்ள டெலாவேர், பியூர்டோ ரிகோ ஆகிய குறுநிலங்கள், மாகாணங்கள் இந்தச் சொர்க்கங்களில் இடம்பெறுகின்றன. சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், துபாய் ஆகியவையும் செல்வ ரகசியங்களைப் பாதுகாக்கின்றன. இந்தச் சொர்க்கங்களில் பணத்தைப் பதுக்கியுள்ள 714 இந்தியர்கள் உள்பட நூற்றுக்கணக்கான உலகப் பணக்காரர்களின் வரி ஏய்ப்புகளை அம்பலப்படுத்தியிருக்கிறது ICIJ எனப்படும் International Consortium of Investigative Journalists (புலனாய்வுச் செய்தியாளர்களின் சர்வதேசக் கூட்டமைப்பு). இந்த அமைப்பு ஏற்கனவே அம்பலப்படுத்திய சொந்த மண்ணில் வரி ஏய்க்கிற பணக்காரர்கள் பட்டியலுக்கு ”பனாமா பேப்பர்ஸ்” என்று பெயர்.

2.அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளைப் பற்றிய புள்ளி விவரங்கள் இருக்கின்றனவா?

இப்போது: கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்பால் 500 பில்லியன் டாலர் இழப்பும் (32 லட்சத்து 73000 கோடி ரூபாய்) செல்வந்தர்களின் வரி ஏய்ப்பால் 200 பில்லியன் டாலர் இழப்பும் (13 லட்சத்து 9200 கோடி ரூபாய்) வருடந்தோறும் அரசுகளுக்கு ஏற்படுவதாக The Tax Justice Network (வரி நீதி வலைப்பின்னல்) கூறுகிறது.

3.இந்த அம்பலத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவின் பெயர் எப்படி வந்தது?

இப்போது: அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் ஒரு நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ஜெயந்த் சின்ஹா, அதே நிறுவனத்தின் கேமன் தீவு கிளைக்குக் கடன் தந்துள்ளார். இதில் சந்தேகம் இருப்பதாக பாரடைஸ் பேப்பர்ஸ் சொல்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஜெயந்த் சின்ஹா, இதனைத் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கவில்லை.

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்