பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஜாமீனில் வந்து பாதிக்கப்பட்ட பெண்ணை 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்

0
429

மத்திய பிரதேசம், ஜபல்பூரில்  17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறை சென்றவன் ஜாமீனில் வெளிவந்து அந்த சிறுமியைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவகுமார் என்பவனை போலீஸ் கைது செய்துள்ளது. இவர் கடந்த 10 நாட்களுக்கு ஜாமீனில் வெளிவந்துள்ளார். தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த பெண் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

அந்தப்பெண்ணை தொடர்ந்து கண்காணித்து வந்த சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளான். இதனையடுத்து அங்கிருந்து தப்பியோட முயன்றவனை அருகில் இருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம்  ஒப்படைத்தனர்.

 https://www.indiatoday.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here