நிபுணன் படத்தின் போது தனக்கு நடிகர் அர்ஜுன் பாலியல் தொந்தரவு தந்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். இதனையடுத்து நான்கு பிரிவுகளில் அர்ஜுன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நிபுணன் படத்தின் போது தனது உடம்பின் மீது அர்ஜுன் விரல்களை படரவிட்டார் என்று ஸ்ருதி ஹரிகரன் கூறிய குற்றச்சாட்டு தமிழ் திரையுலகில் மட்டுமின்றி கன்னட திரையுலகிலும் எதிரொலித்தது. ஸ்ருதி ஹரிகரனின் குற்றச்சாட்டு பொய் என்று அர்ஜுன் மறுத்தார். வழக்கு தொடரப் போவதாக கூறினார். இந்த விவகாரத்தில் நான் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை, அர்ஜுன் வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன் என ஸ்ருதி ஹரிகரன் கூறியிருந்தார்.

சமரசமாக செல்லுங்கள் என்ற கன்னட திரைப்பட வர்த்தக சபையினரின் வேண்டுகோளை நிராகரித்த அர்ஜுன், ஸ்ருதி மீது 5 கோடிகள் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ருதி ஹரிகரன் பெங்களூரு காவல் நிலையத்தில் அர்ஜுன் மீது பாலியல் புகார் அளித்தார். அதனடிப்படையில் 354, 354 ஏ, 506, 509 ஆகிய பிரிவுகளில் அர்ஜுன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here