பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவுக்கு மட்டுமல்ல கும்பல் கொலைகள்,வன்முறைகள் தடுப்பு குழுவுக்கும் அமித் ஷாதான் தலைவர்

0
355

கும்பல் கொலைகள்,  வன்முறைகளைத் தடுக்க  உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழிமுறைகளை செயல்படுத்தாமல் இருப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் நடக்கும் கும்பல் கொலைகள்,  வன்முறைகளைத் தடுக்க மத்திய உள்துறை  அமைச்சர் அமித் ஷா  நியமிக்கப்படுவார்  என்று மூத்த அதிகாரி தி இந்து (ஆங்கிலம்) நாளிதளிடம் தெரிவித்துள்ளார்.    

அமைச்சர்கள் குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கி நடத்துவார். இந்த அமைச்சர்கள் குழுவில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்,  சமூக நீதி மற்றும் அதிகாரத்துறை அமைச்சர் தவர் சந்த் கெஹ்லாட் ஆகியோர் இடம் பெறுவர். 

பணியிடங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவுக்கு அமித் ஷா தலைவராக நியமிக்கப்பட்டு சில நாட்களிலேயே கும்பல் வன்முறை, கொலைகளை தடுக்கும் குழுவுக்கும் அமித் ஷா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

பசுவை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அநியாயக் கொலைகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது மாநிலங்களின் கடமை என்று கூறியிருந்தது  உச்ச நீதிமன்றம்.

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் பிற சிறுபான்மையினர்களை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்கிற கோஷம் தான் பல வன்முறைகளுக்குத் தூண்டுகோலாக இருந்து வருகிறது. மதத்தின் பெயரால் இத்தனை வன்முறைகள் நடப்பது வருத்தமளிக்கிறது. ராம் என்கிற பெயர், இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு மிகவும் புனிதமானது. அப்படியிருக்க, அந்த பெயர் வன்முறைக்காக பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று   திரைப்பட இயக்குநர் அபர்னா சென், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா , இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன், மணிரத்னம் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த 49 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இந்த கடிதம் எழுதியதால் இந்த பிரபலங்களுக்கு மிரட்டல்கள் விடப்பட்டது  , அவர்கள் மீது புகாரும் கொடுக்கப்பட்டது.  

வெள்ளிக்கிழமை ,  கும்பல் கொலைகள்,  வன்முறைகளை தடுக்க  உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழிமுறைகளை செயல்படுத்தாமல் இருப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காங்கிரஸ் சமூக ஆர்வலர் தெஹ்சீன் பூனாவால் தொடர்ந்த சமூக நலன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது . சமீபகாலங்களில் அதிகமாகி வரும் கும்பல் கொலைகளும் , பசுக்குண்டர்களின் வன்முறைகளும் அதிகரித்து வருவதாக இந்த வழக்கு தொடரப்பட்டது.  

கும்பல் கொலைகள், வன்முறைகள் சட்ட ஒழுங்கு பிரச்சனை என்றும் ஒவ்வொரு மாநிலமும் இதற்கு பொறுப்பு என்றும் கூறியது. தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் கும்பல் வன்முறை என்றும் அது குற்றம் என்றும் கூறியிருந்தது உச்சநீதிமன்றம். 

இந்தக் குமபல் வன்முறைகளைத் த்டுக்க வேண்டுமென்றால் கடுமையான் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here