அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களை கட்டுப்படுத்த அரசு புதிய யுக்தியை கையாள உள்ளதாகக் கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு வாகன உரிமம், துப்பாக்கி உரிமம், வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரத்து செய்யப்படும்.

நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வரும் வரையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இந்த வசதிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும். வழக்கு விசாரணை முடிவில் குற்றவாளி என நிரூபணமாகி, தண்டனை வழங்கப்பட்டால் எந்த காலத்திலும் இழந்த சலுகைகளை அவர்களால் பெற முடியாது. பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துவங்கியுள்ள இத்திட்டம் வரும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) அல்லது ரக்‌ஷா பந்தன் (ஆகஸ்ட் 26) அன்று துவங்கப்படும்.

மேலும் காவல்நிலையத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் ஈவ்டீசிங் வழக்குகள் தடையின்றி விசாரிக்கப்படும். விசாரணை அதிகாரிகள் பாலியல் குற்ற வழக்கு விசாரணையை 1 மாதத்திலும் மற்றும் ஈவ்டீசிங் வழக்கு விசாரணையை 15 நாட்களிலும் விரைந்து முடிக்க வேண்டும். ஆறு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்படும். இது குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகளை விரைவில் சந்திக்கவுள்ளேன் என்று கூறினார்.

பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்காக மாநில அரசு வழங்கியதைத் தவிர, மேலும் ஒரு வழக்குரைஞர் நியமிக்க விரும்பினால், அவருக்கு ரூ. 22 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

முன்னதாக, மாநிலத்தில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு பயிற்சி வழங்கும் திட்டத்தை முதல்வர் கட்டார் அறிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின்  நீதிமன்றக் காவலை 14 நாட்களுக்கு (நவம்பர் 27 ) நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப்...
இஸ்லாமிய சமூகத்தில் நிலவும் விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாக உலகெங்கிலும் தீவிரவாதச் சம்பவங்கள் நிகழ்வதாக மலேசிய பிரதமர் துன் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். காஷ்மீரைப் போலவே பாலஸ்தீனமும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். குறிப்பாக பாலஸ்தீன பகுதிகளை இஸ்‌ரேல் ஆக்கிரமித்திருப்பதை ஏற்கவே இயலாது என்கிறார் மகாதீர்.
காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கினை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும், ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்து, லஞ்ச ஒழிப்புத்துறை நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை:
ஜார்கண்டில்  பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் கொலை, கொள்ளை மற்றும் ஊழல் புகார்களில் சிக்கியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை ஐந்து கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடை பெற உள்ளது. 
நீதித்துறையின் வெளிப்படைத் தன்மையை நிலைநிறுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை  தீர்ப்பளித்துள்ளது  ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட 3...
கடினமான வார்த்தைப் பிரயோகம் ஒன்றைக் கற்றுத்தரச் சொல்லி சசி தரூரை சிறுவன் ஒருவன் அணுகினான். அச்சிறுவனுக்கு சசி தரூர் அளித்த பதிலால் இன்று இணையம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.  அப்படி என்ன பதிலைச் சொல்லி விட்டார் சசி தரூர், வாருங்கள் தெரிந்து கொள்வோம். காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here