பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரமங்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தின் சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவி, தான் குளிக்கும்போது திருட்டுத் தனமாக படம் எடுத்து மிரட்டியதாக சின்மயானந்த் மீது குற்றம் சாட்டினார்.

அதை வெளியிட்டு விடுவதாகவும், துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டியும் சின்மயானந்தின் ஆதரவாளர்கள் அழைத்துச் சென்றதாக புகாரளித்துள்ளார். ஓராண்டாக சின்மயானந்த் தன்னை பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாகவும், அதை தன் கண் கண்ணாடியில் கேமரா பொருத்தி பதிவு செய்து ஆதாரம் வைத்திருப்பதாகவும் கூறினார்.

தன்னையும் தன் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக சின்மயானந்த் மிரட்டியதாகவும் அப்பெண் புகாரளித்தார். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் காரணங்களை கூறி வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி சின்மயானந்த் விசாரணைக்கு ஆஜரானார்.

உச்சநீதிமன்றம் நியமித்த உத்தரப்பிரதேசத்தின் சிறப்பு விசாரணைக் குழுவின் பல கட்ட விசாரணைகள் நடத்தியது. தனது குற்றச்சாட்டு தொடர்பாக 43 வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவையும் அந்த மாணவி, சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தார்.

சின்மயானந்தின் படுக்கை அறைக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்ற விசாரணைக் குழுவும் கூடுதல் ஆதாரங்களைத் திரட்டியது. இந்த நிலையில் சின்மயானந்த் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here