பாலா படத்துக்கு திரைக்கதை எழுதும் தியாகராஜன் குமாரராஜா

0
157
Bala

பாலாவின் புதிய படத்தின் திரைக்கதை அமைப்பதில் தியாகராஜன் குமாரராஜா பங்குகொள்ளயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலாவின் பெரும்பாலான படங்களுக்கு கதை வேறொருவராகவே இருப்பார். பட டைட்டிலில் மூலக்கதை என்று அவர்களது பெயர் ஒரு மூலையில் இடம்பெறும். நாச்சியாரில் அதற்கு மாறாக கதை எழுதியவருக்கு பெயரும் புகழும் கிடைத்தது. இப்போது பாலா இயக்கிவரும் வர்மா, தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் என்பதால் பிரச்சனையில்லை. வர்மாவுக்கும் இயக்குனர் ராஜு முருகன்தான் வசனம்.

வர்மாவுக்கு அடுத்து பாலா இயக்கப் போகும் படத்தின் திரைக்கதையை இயக்குனர்கள் தியாகராஜன் குமாரராஜா, நலன் குமாரசாமி மற்றும் சூதுகவ்வும் வசனகர்த்தா சீனிவாசன் மூவரும் இணைந்து எழுதுவதாக உறுதிச் செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. கௌதமின் என்னை அறிந்தால் படத்தின் கதை, திரைக்கதையில் தியாகராஜன் குமாரராஜா பங்களிப்பு செலுத்தியிருந்தார். பாலாவின் இந்த புதிய கூட்டணி, அவரது படம் வழக்கமான ஹாரர்தன்மையில்லாமல் கௌரவமாக இருக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

இதையும் படியுங்கள்: நிர்மலாதேவி விவகாரம்: இது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது’

இதையும் படியுங்கள்: நிர்மலாதேவி விவகாரம்: உயரதிகாரிகளுக்குத் தொடர்பு?; செல்போன்கள் பறிமுதல்; வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

இதையும் படியுங்கள்: உன்னாவ், கத்துவா பற்றிய கார்ட்டூன்கள் (தொகுப்பு)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்