எங்களை அடக்க நினைப்பது அதிகாரமா? ஆணவமா? யார் இவர்கள் என்ற வாசகத்துடன் எட்டுபேர் இடம்பெற்றிருக்கும் போஸ்டர் ஒன்று சென்னையை மிரள வைத்தது. அந்த எட்டு பேரில் ஏழுபேர் முகத்தை மூடிக் கொண்டிருக்க அவர்களுக்கு நடுநாயகமாக சீமான் சிரித்துக் கொண்டிருக்கிறார். இது பட விளம்பரமா? நாம் தமிழர் அரசியல் கட்சியின் போஸ்டரா? போஸ்டரை பார்த்தவர்கள் அனைவரும் குழம்பினர்.

விசாரித்ததில் இயக்குநர் பாலாஜி சக்திவேலின் அடுத்தப் படத்தின் அறிமுக போஸ்டர் இது என்பது தெரிய வந்தது.

காதல், கல்லூரி, வழக்கு எண் என்று யதார்த்தமான கதைகளுக்கு மெனக்கெடும் பாலாஜி சக்திவேல் தனது புதிய படம் குறித்து இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை. திருப்பதி பிரதர்ஸுக்கு படம் இயக்குவதாக இருந்து, உத்தம வில்லனில் ஏற்பட்ட கடனில் திருப்பதி பிரதர்ஸ் திவாலாக, பாலாஜி சக்திவேலின் படமும் சிக்கலுக்குள்ளானது. அதுதான் அவரது படம் குறித்து கேள்விப்பட்ட கடைசி தகவல்.

பாலாஜி சக்திவேலின் படத்தில் சீமான் நடிக்கவில்லை. எனினும் அதன் அரசியல்தன்மைக்காக சீமானை போஸ்டரில் இடம்பெறச் செய்ததாக நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

DN70s05VAAAFk7S

ம்… பாலாஜி சக்திவேலின் அரசியல் புரிதல் சீமானை முன்னிறுத்தியா அமைய வேண்டும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்