பாலகோட் தாக்குதல் ; இந்தியா வீழ்த்தியதாக கூறிய பாகிஸ்தான் எப்-16 விமானம் பத்திரமாக உள்ளது ; உறுதி செய்த அமெரிக்கா; மறுக்கும் இந்தியா

0
184

புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்களை பலி கொண்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து , பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை  இந்திய விமானப்படை அழித்தது என்று இந்தியா திரும்ப திரும்ப கூறிவருகிறது. இந்நிலையில் இந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன பாகிஸ்தானின் எப்-16 போர் விமானம் பத்திரமாக உள்ளது என்று அமெரிக்கா உறுதிபடுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறும் நிலையில், அமெரிக்கா பாகிஸ்தானில் நடத்திய ஆய்வில் பாகிஸ்தானிடம் தாங்கள் வழங்கிய  எப்16 விமானங்கள் அனைத்தும் இருக்கிறது , ஒன்றுமே குறையவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

Foreign Policy இதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி  தன்னுடைய விமானம் கீழே வீழ்வதற்குமுன் பாகிஸ்தான் விமானத்தை  அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா திரும்பத் திரும்ப கூறிவந்தாலும் அமெரிக்க அதிகாரிகள்  பாகிஸ்தானில்  எப்16 விமானங்களின் எண்ணிக்கையை சரிபார்த்ததில் எதுவுமே காணாமல் போகவில்லை. எண்ணிக்கை சரிவர இருக்கிறது என்று கூறியுள்ளார். 

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆஸிஃப் கஃபூர் எப்-16 விமானம் வீழ்த்தப்படவில்லை  என்றும் பாலகோட் தாக்குதல் நடந்த  அன்று எப்-16 ரக விமானம் பயன்பாட்டில் இல்லை என்றும்  கூறியிருந்தார். எப்-16 விமானம் அன்று பயன்பாட்டில் இல்லை என்பதை இந்தியா மறுத்தது . மேலும் எப் 16 விமானங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஏவுகணை உதிரிபாகங்கள் சிதறி கிடந்ததை ஆதாரமாக காண்பித்தது இந்திய ராணுவம். இருந்தாலும் இந்தியாவால் பாகிஸ்தான் விமானத்தை சுட்டுவீழ்த்தியதற்கான வேறு எந்த ஆதாரத்தையும் சமர்பிக்கப்படவில்லை. எப்16 விமானம், அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டதாகும். இந்தியாவுக்கு எதிராக அதை பயன்படுத்த கூடாது என்பது அமெரிக்கா போட்ட நிபந்தனை. ஆனால், எப்16 விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதாகவும், அதை இந்தியா சுட்டு வீழ்த்தியதாகவும் அறிவித்தது அமெரிக்காவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தங்கள் நாட்டுக்கே வந்து எப் 16 விமானங்கள் எதுவும் மாயமாகவில்லை என்பதை உறுதி செய்யுமாறு, அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து அமெரிக்க பாதுகாப்புத் துறையின் 2 மூத்த அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு சென்று நேரில் ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் எப் 16 விமானங்கள் எதுவுமே மாயமாகவில்லை என்று தெரியவந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த, ” Foreign Policy என்ற இதழ், செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா அளித்த எல்லா விமானங்களும் இருந்தன என்று    Foreign Policy இதழிடம் 

அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய விமானப்படை Foreign Policy     இதழில் வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here