ஷார்ஜாவில் சனிக்கிழமை (இன்று) நடைபெற்ற பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின், இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 38.2 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்