பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு இந்தி நடிகர் அமீர் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான ஐடியாக்களை முயன்று பார்க்கும் பார்த்திபனின் புதிய படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படத்தை பார்த்திபன் தனது பயாஸ்கோப் ஃபிலிம் பிரேம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் இசை. 

இந்தப் படத்தில் ஒரேயொரு நபர் மட்டுமே – அதாவது பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார். மொத்தப் படத்தில் அவரைத் தவிர வேறு யாருமில்லை. இந்த செய்தி கேள்விப்பட்ட அமீர் கான் பார்த்திபனை வாழ்த்தி ஒரு வீடியோ அனுப்பியுள்ளார். அதில் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் வெற்றி பெற தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.

பார்த்திபன் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here