போலந்து நாட்டில் உள்ள கேட்டோவைஸ் நகரில், வரலாற்று சிறப்புமிக்க பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக ‘சி.ஓ.பி. 24’ என்னும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையை 2020-ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வருவது என உடன்பாடு எட்டப்பட்டது.

இதன்படி பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கப்படும். இதுபற்றி இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த மைக்கேல் குர்திகா கூறும்போது, “பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டை ஒன்றிணைத்து நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது மிகப்பெரிய பொறுப்பு ஆகும். இது நீண்ட பாதையை கடந்து வந்துள்ளது. யாரையும் விட்டு விடாமல் இந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்த செய்வதற்காக கடுமையாக உழைத்தோம்” என்று குறிப்பிட்டார். இந்த பேச்சுவார்த்தையில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகள் 2020-ம் ஆண்டுக்கு முன்னதாகவே கார்பன் வெளியேறுகிற அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்று இலக்கினை விரைவாக எட்ட வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here