இந்திய நாடாளுமன்ற வரலாற்றில், மத்திய அரசுக்கு எதிராக இதுவரை 27 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது பல்வேறு காலகட்டங்களில் அரசுக்கு எதிராக 15 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் 4 தீர்மானங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ஜோதிர்மாய் பாசு கொண்டு வந்தார்.

. லால் பகதூர் சாஸ்திரி, நரசிம்மராவ் ஆகியோர் பிரதமராக இருந்த போது தலா 3 முறையும், மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது 2 முறையும், ராஜீவ் காந்தி, வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக இருந்த போது தலா ஒரு முறையும் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

. ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது அவரது அரசு மீது 1963-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜே.பி.கிருபளானி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். இதுதான் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம்.

. மோடி அரசு மீது நேற்று கொண்டு வரப்பட்டது 27-வது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகும்.

. இதற்கு முன் கடைசியாக 2003-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொண்டு வந்தார்.

. 1979-ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது அவரது அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்த போதே பிரதமர் பதவியை மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்தார்.

மேற்கண்ட தகவல்களை நாடாளுமன்ற செயலகம் தெரிவித்து உள்ளது.

நன்றி : maalaimalar

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்