lenin

திரிபுராவில் பாஜக கட்சி வெற்றிபெற்ற 48 மணி நேரத்துக்குள் கம்யூனிச சித்தாந்தத்தை ஒழித்த விதமாக லெனின் சிலையை, பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்துடன் பாஜகவினர் இடித்துள்ளனர்.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகளின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 35 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும், ஐபிஎஃப்டி கட்சி எட்டு இடங்களிலும் வெற்றிபெற்றது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி 48 மணி நேரத்துக்குள் பெலோனியா நகரிலிருந்த லெனின் சிலையை பாஜகவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்தனர். அப்போது அவர்கள் பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டனர். சிலையை இடித்த பின்னர், சிலையிலிருந்த தலையைத் துண்டித்து அதனைக் கால்பந்து போன்று பயன்படுத்தி பாஜகவினர் விளையாடியதாக பெலோனியா நகர மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தபாஸ் தத்தா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்