பாரதிராஜாவிடம் சினிமா கற்க ஆசையா? – இதோ ஒரு வாய்ப்பு

0
416
Bharathiraja

இயக்குனர்கள் பின்னால் அலைந்து, அவரது கருணையை பெற்று, அவர் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்து குருகுல கல்வியைப் போல் இனி சினிமா கற்க தேவையில்லை. பணமும், மனமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமா கற்கலாம். அதற்காக சமீபத்தில் பாரதிராஜா தொடங்கியதுதான், பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா.

கமல், ரஜினி இந்த நிறுவனத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டனர். மே 25 முதல் மாணவர் சேர்க்கையை ஆரம்பிக்க உள்ளனர்.

பாரதிராஜாவின் இந்த நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சினிமா வகுப்புகளை எடுக்கவிருக்கிறது. இதில் பல்வேறு வகுப்புகள் உள்ளன.

இயக்கம், திரைக்கதை எழுதுதல்
ஒளிப்பதிவு
ஒலி வடிவமைப்பு
எடிட்டிங்
படத்தொகுப்பு மற்றும் வண்ணத் திருத்தம்
விஜுவல் எபெக்ட்ஸ் மற்றும் அனிமேஷன்
நடிப்பு

ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்குரிய அனைத்துத்துறைகள் குறித்தும் இங்கு கற்றுத்தரப்பட உள்ளன. ஏற்கனவே குறிப்பிட்டது போல் பணமும், மனமும் உள்ளவர்கள் மே 25 முதல் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்: விஜய் படம் யாருக்கு? – லைக்காவுடன் போட்டியில் இறங்கிய சன் பிக்சர்ஸ்

இதையும் படியுங்கள்: தமிழ் மொழிக்கு ஆபத்தா? தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் – மொழியுரிமை ஆர்வலர் ஆழி செந்தில்நாதன்

இதையும் படியுங்கள்: போட்டி இல்லாத பாதை

இதையும் படியுங்கள்: மியாமி கடற்கரையில் ப்ரியங்கா சோப்ரா வைரலான படங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்