பாமாயில் இறக்குமதி நிறுத்தம் ;தவறான செயல் என்றால் எதிர்ப்பு தெரிவிப்போம்; அமைதியாக இருக்க மாட்டோம் – மலேசிய பிரதமர்

0
539

சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு திடீர் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இது காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது  தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசு கொடுத்துள்ள பதிலடி எனக் கூறப்படுகிறது.

காஷ்மீரை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது இந்தியா,” என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்து தான் இருதரப்பு உறவில் உரசலுக்கு வித்திட்டது.

பின்பு இந்தியாவின் குடியுரிமைத் திருத்த சட்டத்தை மலேசிய பிரதமர் மகாதீர் முகமது விமர்சித்தார். அவர் கூறும்போது, “மதச்சார்பற்ற நாடு என்று தன்னை கூறிக் கொள்ளும் இந்தியா, முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன். இதே நடவடிக்கையை நாங்கள் எங்கள் நாட்டில் செய்தால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இங்கு குழப்பமும், நிலையற்றத்தன்மையும் உண்டாகும். அனைவரும் பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு விதித்துள்ள திடீர் கட்டுப்பாடுகள் காரணமாக மலேசிய பாமாயிலை இந்திய வணிகர்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியில் பெரும் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

மலேசிய பிரதமர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று பதிலளித்தது. இதனால் இந்திய – மலேசிய உறவு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மலேசிய நிறுவனங்களிடமிருந்து கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் வாங்குவது தொடர்பான ஆர்டர்களை இந்திய நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்திவிட்டன.

மலேசியாவுக்குப்பதிலாக இந்தோனேசியாவிலிருந்து கூடுதல் விலைக்கு இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர்.

மலேசிய உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவீத பங்களிப்பு கொண்டுள்ளது பாமாயில். அதேபோல் அந்நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பாமாயிலின் பங்களிப்பானது 4.5 சதவீதமாக உள்ளது. எனவே பாமாயில் ஏற்றுமதி பாதிக்கப்படுவது கவலைக்குரிய விஷயம் தான் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்தியா கைவிட்டாலும், மலேசியாவால் பாமாயிலுக்கான புதிய சந்தையை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும், பாமாயில் விலையேற்றத்தால் இந்தியாவுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்றும் மற்றொரு கருத்து உள்ளது.

இதுகுறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது

நாங்கள் அதிகஅளவில் இந்தியாவுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்யும் நிலையில் இந்த கட்டுப்பாட்டால் கவலையடைகிறோம். ஆனால் அதற்காக தவறாக ஏதும் நடந்தால் அமைதியாக இருக்க மாட்டோம். எங்கள் கருத்தை சுதந்திரமாக சொல்வோம். தவறானவற்றை ஏற்றோம் என்றால் பொருளாதார ரீதியில் கவலைப்படும் சூழல் உருவாகி விடும் எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here