திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை கண்டிக்கும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி, அமைச்சராக இருந்தபோது ஏன் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடைசெய்யவில்லை என டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் காமராஜர் பிறந்த தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய திராவிட முன்னேற்றறக் கழக தலைவர் டி. ராஜேந்தர்

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருந்தால் அது இளைஞர்கள் மத்தியில் புகைக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று கூறுகிறார் பா.ம.க. அன்புமணி. நடிகர் விஜய் புகைப்பிடிபது போல வெளியான படத்தை சுட்டிக்காட்டி அதுபோன்ற காட்சிகளை அகற்ற வேண்டும் எனவும் கூறி வருகிறார் . அப்படியானால், அவர் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது, புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஏன் தடைசெய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here