1. விஜய் சேதுபதி ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

2. தொடர் தோல்விகளை சந்தித்துவரும் விக்ரம் பிரபு அதிகம் நம்பியிருப்பது தாணுவின் துப்பாக்கி முனை படம். வரும் 14 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

3. கத்தி படத்தின் கதை என்னுடைய தாகபூமி குறும்படத்திலிருந்து முருகதாஸ் திருடியது என்று வழக்கு தொடர்ந்த அன்பு ராஜசேகர், காப்புரிமை சட்டத்தின் கீழ் முருகதாஸ் மீது வழக்கு தொடர வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். விடாது கருப்பு?

4. திமிரு பிடிச்சவன் படத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒழுங்கமைவு கமிட்டியின் அனுமதி இல்லாமல் வெளியிட்டதால் விஜய் ஆண்டனியின் புதிய படத்துக்கு ஒத்துழைப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

5. இந்தியன் 2 படமே என்னுடைய கடைசிப் படம் என கமல் அறிவித்துள்ளதால் தேவர் மகன் 2, சபாஷ் நாயுடு படங்கள் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சபாஷ் நாயுடு படத்தில் லைகா முதலீடு செய்துள்ளது. 30 சதவீத படப்பிடிப்பும் முடிந்துள்ளது. அதனால் அந்தப் படம் மட்டும் வெளிவரலாம் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்