1. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 63 வது படம் இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம் விளையாட்டை மையப்படுத்தியது என்று கூறப்படுகிறது. படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

2. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன், சேரனின் திருமணம் – சில திருத்தங்களுடன் என்ற படத்தை எடுத்துள்ளார். இதன் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் 21 ஆம் தேதி சென்னை கமலா திரையரங்கில் நடக்கிறது. பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற சீனியர்களுடன் மாரி செல்வராஜ், லெனின் பாரதி போன்ற ஜுனியர்களும் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

3. வெள்ளிக்கிழமை(18,ஜனவரி) இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது. இதில் நடிகை காஜல் அகர்வாலும் கலந்து கொண்டார். இதன் மூலம் இந்தியன் 2 படத்தின் நாயகி காஜல் அகர்வாலா இல்லையா என்ற குழப்பம் தீர்ந்தது. மேலும், நயன்தாரா படத்தில் நடிக்கவில்லை என்பதும்.

4. சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸில் பேட்ட 10 கோடிகளை வசூலித்துள்ளது. ரஜினி நடித்த படங்களில் சென்னையில் 10 கோடிகளை கடந்த 5 வது படம் பேட்ட. இந்த எண்ணிக்கையிலும் ரஜினியே முன்னிலையில் உள்ளார்.

5. நயன்தாராவின் அறம் படத்தை தயாரித்த நயன்தாராவின் மேனேஜர் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ். அதன் பிறகு பல படங்களை தயாரித்தார். விஸ்வாசம் படத்தையும் அவர்தான் தமிழகத்தில் விநியோகித்துள்ளார். அவர் நயன்தாராவை வைத்து ஆங்கில வொண்டர் வுமன் போன்ற ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here