DgHj6muX4AAFg82

1. மாயவன் படத்தை இயக்கிய தயாரிப்பாளர் சி.வி.குமார் அடுத்து கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். முதல் படம் சயின்ஸ் பிக்ஷன் என்றால் இரண்டாவது கேங்ஸ்டர் படம்.

DgQaq-zU8AAThMD

2. சினிமா டிக்கெட்கள் ஜிஎஸ்டிக்குள் வந்த பிறகு தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்பதெல்லாம் போயே போச்சு. அதனால் தமிழில் பெயர் வைப்பதும் குறைந்துவிட்டது. விஜய் படத்தின் பெயர் சர்கார், இந்தி. ஜெய் படத்தின் பெயர் ஜருகண்டி, தெலுங்கு. நட்டி நடிக்கும் படத்தின் பெயர் காட்ஃபாதர், ஆங்கிலம். விரைவில் மலையாளம், கன்னடம், துளு, பஞ்சாபி மற்றும் போஜ்புரி மொழிகளில் தமிழ்ப்படத்தின் பெயர்கள் வைக்கப்படலாம்.

DgHF1iMUwAAKurB

3. சீமராஜா படப்பிடிப்பு 19 ஆம் தேதி முடிவடைந்தது. எல்லோரையும் போல பிரியாணி போட்டு அனுப்பாமல் மேடை போட்டு படத்தில் பங்குபெற்றவர்களின் அனுபவங்களை பகிர வைத்தார் சிவகார்த்திகேயன். படம் வெளிவரும்போது ஏதாவது சேனலுக்கு இதனை காசுக்கு விற்கலாம், படத்துக்கு விளம்பரமாகவும் பயன்படும்.

DgLzZe4UwAAifSo

4. கார்த்திக் சுப்பாராஜின் படத்தின் படப்பிடிப்புக்காக குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற ஹோட்டலின் டைரக்டர்ஸ் பங்களா என்ற இல்லத்தில் ரஜினி தங்கியிருந்தார். இப்போது அந்த வில்லாவுக்கு ரஜினிகாந்த் வில்லா என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

Df0iCOFUcAA4HE7

5. நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சசிகுமாரின் அசுரவதம் படம் சார்பில் ஹெவியான வாழ்த்து செய்திகள், போஸ்டர்கள் வருகின்றன. இதுவரை இப்படி நிகழ்ந்ததில்லை. நெருங்கி விசாரித்தால், சசிகுமார் விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். ஓஹோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here