1. த்ரிவிக்ரமின் அக்னியாதவசி படத்துக்கு அனிருத் இசையமைத்தார். அவரது அடுத்தப் படம் – இன்று வெளியாகியிருக்கும் ஜுனியர் என்டிஆர் நடித்திருக்கும் அரவிந்த சமிதாவுக்கும் அனிருத்தே இசையமைப்பதாக இருந்தது. ஆனால், த்ரிவிக்ரம் அனிருத்தை பயன்படுத்தவில்லை. அதற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார். அனிருத்தின் இசையை புரிந்து கொள்ள எனக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. தெலுங்கு சினிமாவின் இசையை புரிந்து கொள்ள அனிருத்துக்கு அதைவிட அதிக நேரம் தேவைப்பட்டது. அதனால்தான் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை என்றிருக்கிறார்.

2. கார்த்தி நடித்துவரும் படம் தேவ். ரஜத் ரவிசங்கர் என்ற அறிமுக இயக்குநர் படத்தை இயக்கியிருக்கிறார். 80 தினங்கள் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தியவர்கள் இன்று முதல் டப்பிங்கை தொடங்கியிருக்கிறார்கள். பொதுவாக படம் ஆரம்பிக்கும் போது பூஜை போடுவார்கள். இவர்கள் டப்பிங் தொடங்கிய அன்று பூஜை போட்டிருக்கிறார்கள்.

3. விஸ்வாசம் படத்துக்கு சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் டப்பிங் பேசி வருகிறார் நடிகர் அஜித். அவர் டப்பிங் பேசுவதை அறிந்து ஸ்டுடியோவுக்கு அவரது ரசிகர்கள் வந்திருக்கின்றனர். மாலையில் வந்தவர்கள் அஜித்துக்காக இரவு முழுவதும் காத்திருந்து, அதிகாலையில் டப்பிங்கை முடித்து அஜித் வெளியேறியதும், இரவு முழுவதும் காத்திருந்த விவரத்தை கூறியிருக்கிறார்கள். அதிர்ந்து போன அஜித், எதற்கு என்று கேட்க அவர்கள் சொன்ன பதில் அஜித்துக்கு மேலும் அதிர்ச்சியளித்திருக்கிறது. அஜித்துடன் போட்டோ எடுத்துக் கொள்ளவே இரவு முழுவதும் காத்திருந்திருக்கிறார்கள். இப்படியும் ரசிகர்கள்.

4. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமார் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டினை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஜுங்காவுக்குப் பிறகு தமிழில் படம் இல்லாமல் இருந்தவருக்கு சசிகுமார் மூலம் ஜாக்பாட் அடித்திருக்கிறது.

5. ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி, மோகன்லால் நடித்திருக்கும் காயங்குளம் கொச்சுண்ணி படம் இன்று வெளியாகியுள்ளது. 19 நூற்றாண்டில் வாழ்ந்த கொச்சுண்ணி என்ற கேரள ராபின்ஹுட்டின் கதை. இதுவரை இல்லாத அளவுக்கு ஐம்பது கோடிகள் பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்தனர். சில மாதங்கள் முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம், கேரள வெள்ளப் பேரழிவால் இன்று வெளியானது. படம் போட்ட பணத்தை தருமா என்ற பயம் அனைவருக்கும் இருந்த நிலையில், முதல்நாளே படம் சூப்பர் என்ற ரிசல்ட் கிடைத்திருக்கிறது. புலிமுருகனைத் தொடர்ந்து இந்தப் படம் 100 கோடியை தாண்டும் என்று கணித்திருக்கிறhர்கள். படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியவர்கள் தி கிரேட் பாபி அண்ட் சஞ்சய்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்