பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ராமர் கோயில் அறக்கட்டளையில் முக்கிய பதவிகள்

Nritya Gopal Das and Champat Rai Bansal, chairman and general secretary of the trust set up to oversee construction of the Ram temple in Ayodhya, are both accused in the Babri Masjid demolition case.

0
304

மத்திய அமைச்சரவை, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான 15 நபர்கொண்ட அறக்கட்டளைக் குழுவுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ஸ்ரீராம் ஜன்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை என்று அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தஅமைப்பு 92 வயது மூத்த வழக்கறிஞரான கே.பராசரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கிரேட்டர் கைலாஷில் உள்ள அவருடைய வீடே அறக்கட்டளைக்கான அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. நிருத்ய கோபால் தாஸ் தலைவராகவும், சம்பத் ராய் பொதுச் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

அயோத்தியில் ராம்கோவில் கட்டுமானத்தை மேற்பார்வையிடஅமைக்கப்பட்ட அறக்கட்டளையின் தலைவரும் பொதுச் செயலாளருமான நிருத்யாகோபால் தாஸ் மற்றும் சம்பத்ராய் பன்சால் இருவரும்  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

தாஸ் மற்றும் பன்சால் இருவரும் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர் ‘கர சேவகர்கள’  இடையே உரையாற்றினார்கள். இந்த வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகையின் படி. முன்னாள் துணைபிரதமர் எல்.கே. அதவானி உள்பட  எட்டு முக்கிய தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அக்டோபர் 5, 1993 அன்று,தாஸ் மற்றும் பன்சால் உள்பட48 பேர் மீது சிபிஐ ஒருங்கிணைந்த குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.

மே 4, 2001 அன்று,  பன்சால் மற்றும் தாஸ் உள்பட 21 நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கைவிடப்பட்டன, ஏனெனில் சம்பந்தப்பட்ட நீதிமன்றம் இரண்டுபிரிவு  குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற கருத்தை எடுத்துக் கொண்டது – ஒன்று, மசூதியை இடித்த ‘கர சேவாக்கள்’, மற்றும் தூண்டப்பட்டவர்கள் என்று கூறப்படும் மற்றவர்கள்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here