பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நாளை மறுநாள்(திங்கள்கிழமை) முடிவடைகிறது. வருமானக் கணக்கு தாக்கலுக்கான பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 30ஆம் தேதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அதற்கான கெடு நாளை மறுநாள் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் பான் கார்டுன் ஆதாரை இணைப்பது எப்படி என தெரிந்து கொள்வோம்.

ஆன்லைனின்பான்கார்டுடன்ஆதார்எண்ணைஇணைப்பதுஎளிது. அதற்குஎன்னசெய்யவேண்டும்என்பதைபார்ப்போமா..?

1. வருமான வரித்துறை இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும் (https://www.incometaxindiaefiling.gov.in/home)

2. அதன்இடதுபுறத்தில்உள்ள Link Aadhaar என்ற லிங்கை க்ளிக் செய்யவேண்டும்.

3. இப்போது உங்களுக்கு புதிதாக ஒரு பக்கம் திறக்கப்பட்டிருக்கும்.

4. அதில் கொடுக்கப்பட்டுள்ள முதல் கட்டத்தில் உங்களது பான் எண்ணை நிரப்ப வேண்டும். இரண்டாவ துகட்டத்தில் ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும்.

5. மூன்றாவது கட்டத்தில் ஆதாரில் உங்களது பெயர் எப்படியிருக்கிதோ அதனை அப்படியே எழுத வேண்டும்.

6.கொடுக்கப்பட்டிருக்கும் கேப்சாகோடை (captacha code) நிரப்பவேண்டும்.

7. பார்வையற்றவர்களின் வசதிக்காக கேப்சா கோடிற்கு பதிலாக ஒன்டைம் பாஸ் வேர்டு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கேப்சா கோடை பயன்படுத்தவிரும்பாதவர்கள் ஒன் டைம் பாஸ் வேர்டு வசதியை பயன்படுத்தலாம்’

8. இதனை நிரப்பிட்டு லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்தினால் உங்களது ஆதார் பான் கார்டுடன் இணைக்கப்பட்டு விடும்.

ஏற்கெனவே காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், கூடுதல் அவகாசம் தரப்படாது என மத்தியநிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, நாளை மறுநாளுக்குள் பான்கார்டுடன் ஆதார் எண் இணைக்கத் தவறுவோரின் பான்கார்டு பயனற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here