பாதிரியார் குடும்பத்தோடு எரிக்கப்பட்டாரே நினைவிருக்கிறதா ? இந்தக் கொலைக்கும் எம்பி -யாகியிருக்கும் பிரதாப் சாரங்கி (ஒடிசாவின் மோடி)க்கும் தொடர்பிருக்கு……

0
9279

ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மக்களவைத் தொகுதியில்  போட்டியிட்டு வென்ற பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி, தனது சைக்கிளில் பிரசாரம் செய்து ஒற்றைப் பையுடன் டெல்லிக்கு பயணமாகியுள்ளார் என்று செய்தி வெளியிட்டிருந்தோம் . அவரை ஒடிசா மக்கள் ஒடிசாவின் மோடி என்று அழைக்கின்றனர். அவருடைய எளிமையால் அவ்வாறு அழைக்கப்படுகிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு . குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்திய மோடி தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும்போது அவரைப் போன்றவர்கள்தானே அவருடைய ஆட்சியில் அங்கம் வகிப்பார்கள். 

ஒடிசா (அப்போது ஒரிசா என்றழைக்கப்பட்டது) மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்துவப பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். 

இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. இந்த குற்றவாளி தாராசிங் மற்றும் அவரது கூட்டாளிகளிகளும் பஜ்ரங் தளம் , மற்றும் பாஜக அமைப்பைச் சேர்ந்தவர்கள். 

அப்போது  ஒடிசா மாநில பஜ்ரங் தளம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்தான் இந்த பிரதாப்  சாரங்கி , இன்று சைக்கிளில் பிரசாரம் செய்து ஒற்றைப் பையுடன் டெல்லி சென்று எம்பியாக பதவியேற்றிருக்கும் ஒடிசாவின் மோடி. 

இந்த வழக்கை விசாரிக்க  மத்திய அரசு உச்சநீதிமன்ற நீதிபதி டி பி வத்வா தலைமையில் ஒரு கமிஷனை நியமித்தது. இந்தக் கமிஷன் பாஜக,  ஆர் எஸ் எஸ் , பஜ்ரங்க் தளம், விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் இந்தக் கொலையில் சம்பந்தப்படவில்லை என்று கூறியது ஆனால் இந்தக் கொலையை முன்னின்று நடத்தியவர் பஜரங் தள அமைப்பைச் சேர்ந்த தாராசிங்தான் . இந்தக் கொலையில் இந்துத்துவா அமைப்புகள் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்பது  குறித்து ஒரு உறுதியான முடிவுக்கு வரமுடியாது . தற்காலிக அனுமானத்தின்படியே  முடிவு எடுக்க முடியும் என்று இந்த கமிஷனில் இடம் பெற்ற கோபால் சுப்ரமணியன் கூறியிருந்தார். 

இந்தக் கொலையை பஜ்ரங் தள அமைப்பு  திட்டமிட்டு , செயல்படுத்தியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும் கமிஷன் கூறியிருந்தது. ஆனால் கொலையை செய்த தாராசிங் மற்றும் அவரது கூட்டாளிகள்  பாஜக மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள். தாராசிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மாடுகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பசுக்குண்டர்களாக செயல்பட்டு வந்தனர் என்றும் அப்போதே முஸ்லிம் இறைச்சி விற்பனையாளர்களை தாக்கியுள்ளனர் என்றும் இந்தக்  கமிஷன் கூறியுள்ளது . 

 பஜ்ரங் தள அமைப்பு சட்டத்துக்கு புறம்பான அமைப்பு அல்ல அதனால் அந்த அமைப்பில் இருப்பவர்களை விசாரிக்கவில்லை என்று தனது தரப்பை நியாப்படுத்தியது உச்சநீதிமன்ற நீதிபதி டி பி வத்வா தலைமையிலான  இந்தக் கமிஷன். அப்போது  ஒடிசா மாநில பஜ்ரங் தளம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்தான் இந்த பிரதாப்  சாரங்கி , இன்று சைக்கிளில் பிரசாரம் செய்து ஒற்றைப் பையுடன் டெல்லி சென்றிருக்கும்   ஒடிசாவின் மோடி. இந்த ஒடிசாவின் மோடி கொடுத்த சாட்சியத்தைத் தான் அன்று உச்சநீதிமன்ற நீதிபதி டி பி வத்வா தலைமையிலான  கமிஷன் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சாட்சியத்தில் பாதிரியார் குடும்பத்தை எரித்துக் கொன்ற வழக்கில் பஜ்ரங்க் தளம் அமைப்புக்கு எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லை என்று கூறியிருந்தது. இதனை அடிப்படையாக வைத்து இந்தக் கொலைக்கு முக்கிய நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி டி பி வத்வா தலைமையிலான  கமிஷன் முடிவுரை எழுதியது . 

பாதிரியார் குடும்பத்தை எரித்துக் கொன்ற வழக்கின் தீர்ப்பைப் பற்றி Frontline எழுதிய விரிவானக் கட்டுரை இதோ 

https://frontline.thehindu.com/static/html/fl2021/stories/20031024003902400.htm

பாதிரியார் குடும்பத்தோடு எரிக்கப்பட்ட சம்பவம் பற்றிய முன்னுரை  

ஒடிசா (அப்போது ஒரிசா என்றழைக்கப்பட்டது) மாநிலத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்துவப பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் – அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். 

இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கின் மேல்முறையீட்டில், ஒரிசா உயர் நீதிமன்றம் தாரா சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 12 குற்றவாளிகளுள் மகேந்திரா ஹெம்ப்ராம் என்பவனின் தண்டனையை மட்டும் உறுதி செய்து, மீதி 11 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

ஒரிசா உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை  உறுதி செய்து தீர்ப்பளித்தது . அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்; அதுவும் அந்தந்த சம்பவத்தின் உண்மை நிலை, சூழ்நிலையை பொறுத்தே அமைய வேண்டும்; இவ்வழக்கில் பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களைக் கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” எனக் குறிப்பிட்டு, தாரா சிங்கின் தண்டனை குறைக்கப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறது.  இவ்வழக்கில் சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதாரமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது . 

1999-ஆம் ஆண்டு ஸ்டெயின்ஸ் பாதிரியார் தனது குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டபொழுது நாட்டில் நிலவிய சூழ்நிலை என்ன?  அப்பொழுது வாஜ்பாயின் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடி மக்களும் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடுவதைத் தடுக்கும் முகமாக, “மதமாற்றம் பற்றித் தேசிய விவாதம் நடத்த வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததோடு, மைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரவும் முயன்று கொண்டிருந்தது.

இதற்கு இணையாக இன்னொருபுறம் குஜராத்திலுள்ள டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீதும் தேவாலயங்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தது, ஆர்.எஸ்.எஸ்.  இத்தாக்குதலுக்கு அம்மாநில பா.ஜ.க. அரசு துணை நின்றது.  இதே காலகட்டத்தில் ஒரிசாவில் பா.ஜ.க. – பிஜு ஜனதாதள் கூட்டணி ஆட்சிதான் நடைபெற்று வந்தது.  நாடெங்கிலும் கிறித்தவர்களைக் குறிவைத்துத் தாக்குவது என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்தும் சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது போல ஸ்டெயின்ஸ் பாதிரியாருக்கு ஒரு பாடம் புகட்டுவது மட்டும்தான் தாரா சிங்கின் நோக்கம் என்றால், அவர் தனது இரு குழந்தைகளோடு தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஜீப்பைக் கொளுத்தியிருக்க வேண்டிய அவசியமே கிடையாது.  அவரை மிரட்டியிருக்கலாம்  ஆனால், தாரா சிங் தலைமையில் வந்த கும்பலோ, மனோகர்பூர் கிராமத்திற்குள் நுழைந்தவுடன், அக்கிராமத்தின் தகவல் தொடர்புகளைத் துண்டித்தனர்.  தீ வைக்கப்பட்ட ஜீப்பில் இருந்து அம்மூவரும் தப்பித்துவிடாதபடி ஜீப்பைச் சுற்றி நின்றுகொண்ட அக்குண்டர்கள், அம்மூவரும் கருகி இறந்தபின்தான் அக்கிராமத்தை விட்டுத் தப்பிச் சென்றனர்.

ஸ்டெயின்ஸ் பாதிரியாரை உயிரோடு கொளுத்திக் கொல்லுவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் மதம் மாற்றும் பாதிரியார்கள், மதம் மாறிய பழங்குடியினரை மட்டுமின்றி, நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினர் மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை.  இந்தியத் தண்டனைச் சட்டங்களின்படி பயங்கரவாதக் குற்றமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டிய இக்கொலையை, நீதிபதிகள் சாதாரண கொலை வழக்காக நீர்த்துப் போகச் செய்துவிட்டனர்.

இப்படுகொலை பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட வாத்வா கமிசன், “1991-க்கும் 1998-க்கும் இடைபட்ட காலத்தில் ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் – படுகொலை நடந்த பழங்குடியின மக்கள் வசித்து வரும் மாவட்டம் – குறிப்பிடத்தக்க அளவில் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இக்காலகட்டத்தில் கிறித்தவ மக்கள் தொகை அதற்கு முந்தைய காலத்தைவிட 575 எண்ணம்தான் அதிகரித்திருக்கிறது.  இது இயற்கையான உயர்வுதான்” எனக் குறிப்பிட்டுள்ளது.  

‘‘பலவந்தமாகவோ, ஆசை காட்டியோ, மதம் மாற்றியோ, மற்ற மதங்களைவிடத் தன் மதம் உயர்ந்தது என்ற கருத்தின் அடிப்படையிலோ மற்றவர்களது நம்பிக்கைகளில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது” என்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர் . 

பாதிரியார் ஸ்டெயின்ஸும் அவரது இரு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் எரித்துக் கொல்லப்பட்டிருந்தாலும், (குற்றவாளிகளின்) நோக்கம் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் ஏழை பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெயின்ஸுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான்” என்ற வரிகள் வரும் பத்தியைத் தீர்ப்பில் இருந்து நீதிபதிகள் நீக்கிவிட்டனர்.

இதை நீக்கியவுடன்,  ” தாரா சிங்கிற்கு மரண தண்டனை அளிக்கப்படாதது ஏன்?” என்ற கேள்வி வந்துவிடும் என்பதை உணர்ந்திருந்த நீதிபதிகள், “குற்றம் நடந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டதால், ஒரிசா உயர் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை அதிகரிக்கத் தேவையில்லை” எனத் தீர்ப்பைத் திருத்தியும் விட்டனர்.

தாரா சிங்கிற்கு அதிகபட்ச தண்டனை அளிக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் நீதிபதிகள் செயல்பட்டிருக்கிறார்கள். 

600-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட மும்பைக் கலவரம்  2,000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம் , செயல்களைப் புரிந்த இந்து மதவெறி பயங்கரவாதிகளுள் ஒருவருக்குக்கூட அதிகபட்ச தண்டனை அளிக்கவே இல்லை . 

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது) 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here