பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் ‘பசு மாடு அறிவியல்’ ஆன்லைன் தேர்வில்
5 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளதாக செய்தி வெளியானது
மத்திய கால்நடை அமைச்சகத்தால், 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ராஷ்டிரிய
காமதேனு ஆயோக் அமைப்பு, இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை, தனது
இணையதளத்தில் வெளியிட்டது.
தற்போது அந்தத் தேர்வை, ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பு
ஒத்திவைத்துள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு தொடர்பாக, ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் செய்தியில், “பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற இருந்த பசு மாடூ அறிவியல் ஆன்லைன் தேர்வு மற்றும் பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற இருந்த மாதிரி தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று மட்டுமே
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த இணையதளத்தில், வெளியிடப்பட்டிருந்த 54 பக்க
பாடதிட்டமும் நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம், 2019 ஆம் ஆண்டில் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பை உருவாக்கியதோடு, அதன் தலைவராக வல்லபாய் கத்தரியா மற்றும் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்களாக சுனில் மான்சிங்கா, ஹூகும் சந்த் சாவ்லா ஆகியோரை நியமித்தது.
“போலி அறிவியலை ஊக்குவிக்கும்” வகையிலான வல்லபாய் கத்தரியாவின் செயல்பாடுகள் அரசாங்கத்தில் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக, அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிப்பதாகவும், இது தொடர்பான தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்குக கத்தரியா பதிலளிக்கவில்லை.
இது தொடர்பாக பேசியுள்ள ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர் சாவ்லா, “எங்களுக்கு நீட்டிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்தது என செய்தி வந்தது. தேர்வை நடத்துமாறு அமைச்சர் கிரிராஜ் சிங்கை நாங்கள் கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர், “ஹம் நஹின் கார் பேயங்கே’ (நாங்கள் அதை நடத்த முடியாது)
என்றார்.”
“புதிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், தேர்வைப் பற்றி
முடிவெடுப்பார்கள்” எனச் சாவ்லா கூறியுள்ளார்
மேலும் இணையத்தில் இருந்த பாடத்திட்டத்தில் இந்திய பசுவின் பால் மஞ்சள் நிறமாக இருக்க காரணம் அதில் தங்கத் துகள்கள் இருக்கிறது என்றும் இந்திய பசுவின் பால் சர்க்கரை நோய், மூளை சம்பந்தமான நோய்கள் , மூட்டு வலி, ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் என்றும் ஜெர்சி பசிவின் பாலில் பலவிதமான நச்சுகள் இருப்பதால் பல நோய்களை ஏறபடுத்தும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இதறகான மருத்துவ ஆதாரங்கள் எதுவும் தரப்படவில்லை. இதுவும் சர்ச்சையை ஏறப்டுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன . மேலும் பல்கலைக்கழக மானிய குழு இந்தத் தேர்வை ஊக்குவித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
ராஷ்ட்ரிய காமதேனு அயோக் அமைப்பு நடத்தும், ‘சுயாதீன மாடு
அறிவியல் தேர்வை ஊக்குவிக்குமாறு, 900 பல்கலைகழகத்தின் துணை
வேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு கடிதம் எழுதியிருந்தது
ஒரு மணிநேரம் நடைபெற இருக்கும், இந்தத் தேர்விற்கு, வெளியிடப்பட்டிருக்கும்
பாடத்திட்டத்தில், “கதிர்வீச்சை கட்டுப்படுத்துவதற்காக மாட்டு சாணத்தை இந்தியா
மற்றும் ரஷ்யா, அணுசக்தி மையங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல்,
போபால் விஷ வாயு கசிவின்போது, போபால் குடியிருப்புவாசிகளை (சாணம்)
பாதுகாத்தது. சூரிய சக்தியை உறிஞ்சும் விசேஷ சக்தி இந்திய மாடுகளிடம்
இருக்கிறது” போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
“இதில் அறிவியலற்றது என்று எதுவுமில்லை. இந்திய மாட்டினத்தின்
முக்கியத்துவத்தை நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம். அதனால், இந்தத் தேர்வை
நடத்துகிறோம்” என ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள்
சந்திப்பில், ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கத்திரியா
தெரிவித்திருந்தார்
13 மொழிகளில் நடத்தப்பட இருக்கும் இந்தத் தேர்வுக்கு ஜனவரி 5 ஆம் தேதி
விண்ணப்பங்கள் தொடங்கின. இதுவரை 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தம் 5 லட்சத்திற்கு அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பாக்கப்பட்டது