பிரபல பாடகி பிரணவி, இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தற்போது கூறியுள்ளார்.

தெலுங்குசினிமாவில் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருப்பவர் பிரணவி. ஸ்ரீ ராமதாசு, ஹேப்பிடேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட படங்களில் பாடி மிகவும் பிரபலமானவர் இவர். 2016–ல்  நடன இயக்குனர் ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை ஒன்று உள்ளது.

மேலும் அவர் கூறியதாவது : ‘‘நான் சினிமாவில் பாட பலரிடம் வாய்ப்பு கேட்டேன்.  அப்போது பிரபல இயக்குனர் ஒருவர் தனக்கு பாட வாய்ப்பு தருவதாக ஸ்டூடியோவுக்கு அழைத்தார். அங்கு சென்றதும் படுக்கையை பகிர்ந்தால் பாட வாய்ப்பு தருவேன் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

ஆனால் அவர் எதையுமே பொருட்படுத்தாமல் படுக்கைக்கு அழைப்பதிலேயே குறியாக இருந்தார். எனக்கு கோபம் வந்தது. அவரை பார்த்து செருப்பால் அடிப்பேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன்’’.

இவ்வாறு பாடகி பிரணவி கூறினார். இது தெலுங்குப் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here