பாஜக -4 , காங்கிரஸ் -17 மாநிலங்களில் படு தோல்வி

0
190

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 351 தொகுதிகளைப் பிடித்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. காங்கிரஸ் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு இடத்தைக் கூடப் பெறவில்லை. இந்த 17 மாநிலங்களில் காங்கிரஸ்க்கு 51 இடங்கள் மட்டுமே கிடைத்தது. 

ஆந்திரா, அருணாசல பிரதேசம், டெல்லி, குஜராத், ஹரியானா. ஹிமாச்சல், ஜம்மு – காஷ்மீர், மணிப்பூர், மிசோரம், ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட், அந்தமான் மற்றும் நிகோபர், சண்டிகர், தாதர் நகர், ஹவேலி, டாமன் டையூ மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய இடங்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. 

பாஜக மூன்று மாநிலத்திலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் ஒரு இடத்தைக் கூட பெறவில்லை. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில்  கூட வெற்றி பெறவில்லை. 17 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இடங்களைப் பெற்றுள்ளதாக  அமித் ஷா தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here