ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளாரான ராம்நாத் கோவிந்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரிக்கும்படி பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் 24ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 17ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். இதனையடுத்து, பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் ஆதரவு கோரினார்.

இதையும் படியுங்கள் : ஓ அஞ்சலி… ஓ ஜெய்… உருகிய காதல் நெஞ்சங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்