பாஜக விளம்பர வீடியோவில் என் படமா? கார்த்தி சிதம்பரத்தின் மனைவி கண்டனம்

The promotional video, which runs for more than five minutes, showcased the greatness of Tamil language, culture, and how the saffron party is helping the state to grow.

0
500

பாஜக விளம்பர வீடியோவில் தனது படம் இருப்பது குறித்து ப.சிதம்பரம் மருமகளும் பரதநாட்டிய கலைஞருமான ஸ்ரீநிதி சிதம்பரம் ட்வீட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அதிமுக திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. மேலும் ஆன்லைனிலும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதும் அனைத்து கட்சிகளும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் பரப்புரை வீடியோவில் பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீநிதி சிதம்பரத்தின் காட்சி ஒன்று வருகிறது. முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மருமகளான ஸ்ரீநிதி சிதம்பரம் இதுகுறித்து டிவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்

பாஜகவின் தேர்தல் பரப்புரையில் பரப்புரை வீடியோவில் எனது படம் பயன்படுத்தப்பட்டுள்ளது அபத்தமானது என்றும் தமிழகத்தில் தாமரை என்றும் மலரவே மலராது என்றும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் . 

2010 ஆம் ஆண்டு செம்மொழி மாநாட்டுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் எழுதப்பட்டு , ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து பாடிய பாடலுக்காக ஶ்ரீநிதி சிதம்பரம் பரத நாட்டியம் ஆடியிருந்தார் அந்த  எ வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட படமாகும்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here