2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்’ என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார். சசி தரூரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக சசி தரூரின் பேச்சுக்கு காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் கலந்துகொண்டு பேசிய போது , வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்’ எனக் கூறியுள்ளார். பாஜக புதிய அரசியலமைப்பை உருவாக்கிவிடும். இந்தியாவில் சகிப்புதன்மையை குறைத்துவிடும்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கிழித்துவிட்டு புது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் என்றும் சசி தரூர் கூறியுள்ளார். அவர்கள் உருவாக்கும் புதிய அரசியலமைப்பு இந்து ராஷ்ட்ரத்தின் கோட்பாடுகளைக் கொண்டதாக இருக்கும் . கோட்பாடுகள்

சிறுபான்மையினரின் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டு ஒரு இந்து பாகிஸ்தான் உருவாவதற்கு வழி வகுக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு இந்திய நாடு ‘இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்’. இந்து பாகிஸ்தான் உருவாக நம் நாட்டு தலைவர்களான மஹாத்மா காந்தி, நேரு, சர்தார் பட்டேல், மௌலானா ஆசாத் போன்றவர்கள் இந்திய விடுதலைக்கு பாடுபடவில்லை.

சசி தரூரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா , சசி தரூரின் பேச்சுக்கு காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாகிஸ்தான் உருவாவதற்கு காரணமான காங்கிரஸ், மீண்டும் இந்தியாவை தாழ்த்தி இந்தியாவின் இந்துக்களை குறைகூறுகிறது என்று கூறினார்.

Courtesy : NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here