பாஜக மிரட்டுகிறது; கட்சியில் இணைய சொல்கிறது திரிணமூல் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

0
302

எங்கள் கட்சியினரை தேர்தலில் நிற்க விடாமல் மிரட்டுகிறது பாஜக,  எங்கள் தலைவர்களை தன்பக்கம் இழுக்கிறது திரிணாமுல் காங்கிரஸ் என  திரிபுரா மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான அஜோய் குமார் தெரிவித்துள்ளார்

 திரிபுரா மாநிலத்தில் முதல்வர் பிப்லாப் தேப் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரும்ந் நவம்பர் 25ம் தேதி அங்கு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அகர்தலா மாநகராட்சியில் 51 வார்டுகள், 13 நகராட்சிகள் மற்றும் ஆறு நகர பஞ்சாயத்துக்களில் மொத்தம் 334 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுவை திரும்பப் பெறும் கடைசி தேதியன்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றதால் 112 இடங்களில் போட்டியின்றி பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். எஞ்சியுள்ள 222 இடங்களுக்கான தேர்தலில் 785 பேர் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே திரிபுரா உள்ளாட்சித் தேர்தல் குறித்து திரிபுரா, சிக்கிம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் அஜோய் குமார் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது – 

பாஜக எங்கள் வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடக் கூடாது என மிரட்டியது. ஜனநாயகத்தில் இப்படி நடக்கக் கூடாது, இது குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் தெரிவித்திருக்கிறோம். அரசியல் ரீதியாக இது எங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

காங்கிரஸ் தலைவர்களை திரிணாமுல் காங்கிரஸ் இழுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்களின் கொள்கை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வேரில் இருந்து கட்டமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

மேற்குவங்க மாநிலத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அதீத பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அக்கட்சியில் எல்லைப்பரப்பை வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக திரிபுராவிலும், கோவா மாநிலத்திலும்  நிலைநாட்ட பணியாற்றி வருகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here