பாஜக பெட்டகத்தில் கறுப்புப் பணம் நுழைய தேர்தல் பத்திரங்கள்; புதிய இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள்தான் லஞ்சம் – விளாசும் ராகுல்

0
317

தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி விதிகளை மத்திய அரசு மீறியதாக huffingtonpost இந்தியா தளத்தில் செய்தி வெளியானது . இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி . புதிய’ இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோதமாக கமிஷன் கொடுப்பதுதான் தேர்தல் பத்திரங்கள் என்று அழைக்கப்படுவதாக டிவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.

“பாஜக பெட்டகத்தில் கறுப்புப் பணம்” நுழைய தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி விதிகளை மத்திய அரசு மீறியுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் திங்கள்கிழமை குற்றம்சாட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இதுதொடர்பாக ராகுல் தனது  டிவிட்டர் பக்கத்தில்  மார்ச் 2018 லிருந்து ரூ6000 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது . இதில் 95 சதவீதம் பணத்தை பாஜகவே பெற்றிருக்கிறது என்று HuffingtonPost India வெளியிட்ட செய்தியை மேற்கோளிட்டு  புதிய’ இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத  கமிஷன்தான் தேர்தல் பத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன என்று பதிவிட்டிருக்கிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here