பாஜக பசுவதைச் செய்கிறது -‘சௌகிதார்’ அடைமொழியை நீக்கிய மற்றுமொரு பாஜக எம்.பி குற்றச்சாட்டு

0
162

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார் பூர் தொகுதியில் 2014-ஆம் ஆண்டு போட்டியிட்டு எம்.பி.யான வர் பாஜகவைச் சேர்ந்த விஜய் சாம்ப்லா. இவர் மத்திய அமைச்சராகவும் பதவிவகித்தார். இவர் பாஞ்சாபில் முதன்முதலாக தேர்வு செய்யப்பட்ட தலித் சமூத்தைச் சேர்ந்த எம்பி. 

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார் விஜய் சாம்ப்லா.

 2019  மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஹோஷியார்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக பாஜக மேலிடத்திடம் டிக்கெட் கேட்டு இருந்தார். ஆனால் இவருக்கு பதிலாக பக்வாரா தொகுதி எம்எல்ஏ சோம் பிரகாஷுக்கு பாஜக அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் விரக்தியடைந்த மத்திய அமைச்சர் விஜய் சாம்ப்லா, தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சவுகிதார் (காவலாளி) என்ற அடைமொழியை நீக்கிவிட்டார்.

மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் நான் மிகவும் சோகத்தில் இருக்கிறேன், பாரதிய ஜனதா கட்சி பசுவதை செய்துள்ளது” என குற்றம்சாட்டினார்.

மற்றொரு டிவிட்டர் பதிவில் என் மீது ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதை நீங்கள் (பாஜக) சொல்ல வேண்டும். என் மீது என்ன தவறு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். எனக்கு ஏன் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. என் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. என் நடத்தையைப் பற்றி யாரும் கைநீட்டி பேசவே முடியாது.

எனது தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறேன். என்னுடைய தொகுதியில் விமானநிலையம் வர காரணமாக இருந்துள்ளேன். சிறப்பான சாலை வசதிகள் அமைத்துள்ளேன். பல்வேறு புதிய ரயில்கள் இந்தத் தொகுதிக்கு விடப்பட்டுள்ளன. இதையெல்லாம் தவறு என்று நீங்கள் சொன்னால், இந்தத் தவறை மீண்டும் செய்யாதீர்கள் என்று எனது வருங்கால சந்ததிகளுக்குச் சொல்வேன்” என்று பதிவிட்டுள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில், தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் போய் சேரவில்லை என்று விஜய் சாம்ப்லா என்று அண்மையில் குற்றம்சாட்டி வந்தார்.

காங்கிரஸில் இணைந்த பாஜக தலித்  எம்.பி. உதித் ராஜ்


வடமேற்கு டெல்லி (தனி) மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்து வருபவர் உதித் ராஜ். தற்போதைய மக்களவைத் தேர்தலில், பாஜக சார்பில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக வடமேற்கு டெல்லி தொகுதியில் சிறப்பாக பணியாற்றி வந்த தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல் கட்சி புறக்கணித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

இவரும் தன் பெயருக்கு முன்னால் இருந்த சௌகிதார் அடைமொழியை நீக்கினார் .


பின்பு பாஜக வில் இருந்து விலகி காங்கிரஸில் புதன்கிழமை இணைந்தார். 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here