பாஜக தேர்தல் அறிக்கை ; சங்கல்ப் பத்திரம் ; ராமர் கோயில் , சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம்,சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த முயற்சி உட்பட 75 வாக்குறுதிகள்

0
213

2019 மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

பாஜக தலைமை அலுவலகத்தில்  நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

2019 பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் அமித் ஷா வெளியிட்டார். இதற்கு ‘சங்கல்ப பத்திரம்’ என்று பெயரிட்டுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியிட்ட  அமித்ஷா , கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் மிகவும் ஸ்திரமான ஓர் அரசாங்கத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். நமது நாடு இன்று உலகின் முக்கிய இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இன்று மின்சாரம் உள்ளது. 8 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 7 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, 50 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது’ என்றார். 

 இந்த தேர்தல் அறிக்கையின் மூலம் நாட்டு மக்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.இதில் மொத்தம் 75 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

-தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விரைவாக ராமர் கோயில் கட்ட முயற்சி.

-அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மூலம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.

-சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.

-வட்டி இல்லாமல் 1 லட்சம் ரூபாய் வரை குறுகிய கால விவசாயக் கடன் அளிக்கப்படும். 

-நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்

-சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்

-சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் பள்ளிகள் அளவில் கற்பித்தல் அதிகரிக்கப்படும். 

-2024க்குள் வீடுகள் அனைத்திற்கும் குழாய் தண்ணீர் இணைப்பு வழங்கப்படும்

• விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும்

• அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசித்து ஜிஎஸ்டி நடைமுறைகள் இன்னும் எளிமையாக்கப்படும்

• 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டித்தரப்படும்

-கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்படும்

-கிசான் சம்மான் திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்

– முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்

-மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்

-நாடு முழுவதிலும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்

-நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை

-விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உரிய நடவடிக்கை

-நவீன கால சூழல்களை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here