பாஜக தலைவர் அமித் ஷா கொலைக் குற்றவாளி என்ற ராகுல் காந்திக்கு பதில் கூறிய அமித் ஷா

0
249

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில்  தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது பாஜக தலைவர் அமித் ஷாவை கொலைக் குற்றவாளி என்று கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய அமித் ஷா ராகுல் காந்திக்கு சட்டம் பற்றிய அறிவு இல்லை என்றும் என்மீது பதியப்பட்டது எல்லாமே பொய் குற்றச்சாட்டுகள் எனவும் அவை  அரசியல் காழ்புணர்ச்சியினால் பதியப்பட்டது என்றும் கூறியுள்ளார்.  

பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஊழல் குறித்து  பிரதமர் மோடி விசாரணை செய்யப்படுவார். 

பாஜக தலைவர் அமித் ஷாவைப் பற்றி குறிப்பிடும்போது கொலைக் குற்றவாளி அமித் ஷா என்றார். 

இதற்கு உடனடியாக பதிலளித்து பேசிய அமித் ஷா என்மீது பொய் வழக்கு ஜோடிக்கப்பட்டது , போதுமான ஆதாரங்கள் இல்லாததால் என்னை நீதிமன்றம் விடுவித்துவிட்டது . ராகுல் காந்தியின் சட்ட அறிவு பற்றி நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை என்றார்.  

2014 இல் சிறப்பு நீதிமன்றம் ஷொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் துள்சிராம் பிரஜாபதி என்கவுன்டர் வழக்குகளிலிருந்து அமித் ஷாவை விடுவித்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியினால்தான் அந்த வழக்குகள் பதியப்பட்டது என்றும் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.  

இதையும் படியுங்கள் ; பாஜக தலைவர் அமித் ஷா கொலைக் குற்றவாளி என்ற ராகுல் காந்திக்கு பதில் கூறிய அமித் ஷா

https://bit.ly/2FhMAez

இதையும் படியுங்கள் ; ஷொராபுதீனை என்கவுன்டர் செய்ய லஞ்சம் பெற்றார் அமித் ஷா; சிபிஐ அதிகாரி பரபரப்பு தகவல்

 

https://bit.ly/2ITZVw0

ஜபல்பூருக்கு அருகில் இருக்கும் சிகோராவில் பேசிய ராகுல் காந்தி காவலாளி ஒரு திருடன் (‘chowkidar chor hai‘) என்ற கோஷத்தை மக்களிடையே எழுப்பினார்.  

மிக அழகான கோஷம் என்று கூறிய ராகுல் காந்தி காவலாளி “Chowkidar“ என்று கூறியவுடன் கூடியிருந்த மக்கள் திருடன்  “chor hai” என்று கூச்சலிட்டனர் .

பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டதாகச் சொன்ன தனது கருத்து திரித்துக் கூறப்பட்டதாகவும், எனினும் தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார். மோடி திருடர்தான். ஆனால், அவரை உச்சநீதிமன்றம் திருடர் என்று சொல்லவில்லை என்று ராகுல்காந்தி அந்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.

ஜபல்பூருக்கு அருகில் இருக்கும் சிகோராவில் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது –

ரூ526 கோடி மதிப்புடைய ரஃபேல் விமானங்களை ரூ1600 கோடிக்கு மோடி அரசு வாங்கியுள்ளது . அரசு நிறுவனமான ஹெச் ஏ எல் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய ஒப்பந்தத்தை அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு மோடி கொடுத்தது.   காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் விமானங்களை இந்தியாவிலேயே உருவாக்குவதற்கான எல்லா வழிகளையும் கண்டறிவோம் என்றார் ராகுல் காந்தி . 

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து 20 நிமிட விவாதத்துக்கு தயாரா மோடி அவர்களே என்று மோடியிடம் சவால் விட்டார். ரஃபேல் விமான ஒப்பந்தங்களை அரசு நிறுவனத்துக்கு கொடுத்திருந்தால் 1 லட்சம் இளஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றிருப்பர்.  

மோடி அவரது நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்த ரூ 30000 கோடியை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  அவரிடம் இருந்து பறித்து விடுவோம் 

இந்த சௌகிதார் (காவலாளி) ஸ்லோகன் சட்டீஸ்கரில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது அங்குள்ள இருவர் கூறியது  ஆகும் . நான் பேசும் போது பிரதமர் மோடி தன்னை நாட்டின் சௌகிதார் (காவலாளி) என்று கூறுகிறார் என்றேன் அப்போது அங்கிருந்த இருவர் ‘chor hai’ (திருடர்) என்று கத்தினார்கள்.  அவ்வாறு வந்ததுதான் chowkidar chor hai என்றார். 

இங்கு பிரதமர் தனது பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளும்போது ஏன் அனில் அம்பானிக்கு அவர் ரூ30000 கோடியை கொடுத்தார் என்றும் அதற்கு அம்பானி மோடிக்கு எதைத் திருப்பித் தந்தார் என்றும்  கேளுங்கள். 

பாஜக தலைவர் அமித் ஷா கொலைக் குற்றவாளி, அவரின் மகன் ஜெய் ஷா-க்கு மேஜிக் தெரியும் போல, அதனால்தான் அவர் 3 மாதங்களில் ரூ 50000 த்தை ரூ80 கோடியாக மாற்றியிருக்கிறார்.  ஆனால் அமித் ஷாவின் நண்பர்  மோடியோ இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார். ஏன் நம் நாட்டு இளைஞர்கள் ரஃபேல் விமானங்களை தயாரிக்ககூடாதா? 

ரூ 50000 கோடியை ரூ80 கோடியாக ஜெய் ஷா மாற்றி விட்டார் என்று ஆதாரங்களோடு செய்தி வெளியிட்ட ஊடகத்தின் மீது ஜெய் ஷா வழக்கு பதிவு செய்திருக்கிறார். 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவோம். அப்போது மோடியும், அனில் அம்பானியும் விசாரிக்கப்படுவார்கள். 

அனில் அம்பானி போன்றோர்கள் கொள்ளையடித்த பணத்தை திரும்ப பெற்று காங்கிரஸ் அறிமுகப்படுத்தும் நியாயம் திட்டத்துக்காக பயன்படுத்த படும். 

நரேந்திர மோடி ஏழை மக்களைக் கொளளையடித்து நிரவ் மோடி , விஜய் மல்லையா போன்றோர்களுக்கு கொடுத்து நாட்டைவிட்டு தப்பி ஓட விட்டார்.  

இந்த தேர்தலுக்கு பிறகு கடன் வாங்கியதற்காக எந்த விவசாயியும் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்காது. 

நியாய திட்டத்தின் மூலம் நாட்டில் இருக்கும் 5 கோடி ஏழை மக்களுக்கு மாதம் தோறும் ரூ6000 வழங்கப்படும். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம், பொய் வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். நாங்கள் ஆட்சியமைத்த மாநிலங்களான ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்திருக்கிறோம். 

thewire.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here