பாரதிய ஜனதா கட்சியுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது என, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதில் தனக்கு உடன்பாடில்லை என்றும், தனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்வில் நெருக்கடிநிலை காலத்தைவிட, திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இல்லாத கடந்த ஓராண்டுதான் அதிக சுமையாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்கள் என்றும், அரசியல் களத்துக்கு அவர்கள் வரும்போது பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆன்மிகத்தையும் அரசியலையம் தனித்தனியாக பார்க்க வேண்டிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அதனை தலைகீழாக்கப் பார்க்கிறார் என்றும், ரஜினியின் ஆன்மிக அரசியல் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி, எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என நினைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அடுத்தத் தேர்தலில் தாங்கள் எதிர்கொள்ள கூடிய பெரிய எதிரி மதவியமும், பணநாயகமும்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்