பாஜகவுக்கு வந்த நன்கொடை ரூ76 கோடியிலிருந்து ரூ532 கோடியாக உயர்வு

0
352

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு ஆகியவை சேர்ந்து, 2016-17-ஆம் ஆண்டில் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெற்ற தேசிய கட்சிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது.

2016-17-ஆம் ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை ரூ.532.27 கோடியாக அதிகரித்துள்ளது, இது காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் பெற்ற நன்கொடையைக் காட்டிலும் 9 மடங்கு அதிகம் என்று ஜனநாயக மாற்றத்திற்கான அமைப்பு (ADR) கூறியுள்ளது .

7 தேசிய கட்சிகள் சேர்ந்து பெற்ற மொத்த நன்கொடை ரூ. 589 கோடி. அதில் பாஜக மட்டும் பெற்ற நன்கொடை ரூ.532 கோடி .

Screen Shot 2018-05-31 at 11.15.27 AM

Screen Shot 2018-05-31 at 11.15.40 AM

இதில் பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் 2016-17ஆம் ஆண்டு பெற்ற நன்கொடைகள் எவ்வளவு என்று ஆய்வு செய்யப்பட்டன.

2015-16ஆம் ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை ரூ.76.85 கோடி , 2016-17-ஆம் ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை ரூ.532.27 கோடி. கடந்த நிதியாண்டில் பாஜக பெற்ற நன்கொடையை விட இந்த நிதியாண்டில் பாஜக பெற்ற நன்கொடை 7 மடங்கு அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 2016-17-ஆம் ஆண்டில் ரூ.41.40 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த 2015-16-ஆம் ஆண்டில் ரூ.71 லட்சம் நன்கொடை பெற்றநிலையில், 2016-17-ஆம் ஆண்டில் ரூ.6.34 கோடியாக உயர்ந்துள்ளது .

பகுஜன் சமாஜ் கட்சி கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக நன்கொடை ஏதும் பெறவில்லை எனத் தெரிவித்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here