பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்தாதது ஏன்? RTI மூலம் சமூக ஆர்வலர் கேள்வி

0
487

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்ட வெளிநாட்டு மாணவர்களை, இந்திய அரசு நாடு கடத்தி  உள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் வெளிநாட்டினர்  ஏன் நாடு கடத்தப்படவில்லை, அவர்கள்மீது  எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சமூக ஆர்வலர் சாகெட் கோஹலே என்பவர் மத்தியஅரசுக்கு ஆர்டிஐ சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய பாஜக அரசு  அமல்படுத்தி உள்ள  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்தவாறு இருக்கிறது. 

‘சென்னை ஐஐடியில் சிஏஏக்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் அங்கு படித்து வந்த  ஜெர்மன் மாணவர், ஜேக்கப் லிண்டெந்தல் என்பவரும் கையில் பதாதை ஏந்தி மத்தியஅரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தார். அவரது பதாதையில், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை அன்றைய ஹிட்லர் தலைமையிலான ஆட்சியோடு ஒப்பிட்டு மறைமுகமாக அவர் விமர்சித்தது இருந்தார். இது  சமூக வலைத் தளங்களில் வைரலானது.

இதைத்தொடர்ந்து அவர் இந்தியாவில் தங்கி பயில்வதற்கான அனுமதியை இந்திய குடியுரிமைத் துறை ரத்து செய்தது. அவரிடம் குடியேற்றத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி ஜேக்கப்பை நாட்டை விட்டு வெளியேற்றினர்.

பொதுவாக வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் மற்ற நாடுகளில் விசா பெற்று  படித்தாலோ, பணியாற்றினாலோ, அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதோ, விமர்சிப்பதோ கூடாது என்பது விதிகள். இந்த விதிகளை மீறியதாகத்தான், ஐஐடி மாணவர் ஜேக்கப்   உள்பட சிலர்  இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஆனால், சில வெறிநாட்டினர், பாஜகவுக்கு  ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும், பாஜக ஆதரவான நிலைபாடுகளையும் எடுத்துள்ளனர். அவர்கள்மீது விதி படி நடவடிக்கை எடுக்காமல் பாஜக அரசு, அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

இந்த நிலையில்தான் சமூக ஆர்வர் சாகெட் கோஹலே மத்திய உள்துறைக்கு தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து கோஹலே, தனது டிவிட்டர் பக்கத்தில்    தாரெக்ஃபாதா மற்றும் சில வெளிநாடுகளைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர்கள், மத வெறுப்பு தொடர்பாக பேசியும், தகவல் பதிவிட்டும் வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நாடு கடத்தாமல் பாஜக அரசு ஏன் மவுனம் காத்துவருகிறது? 

பாஜகவுக்கு ஆதரவாக கருத்து சொல்வதற்கு வெளிநாட்டினரை இந்திய விதிகள் அனுமதிக்கிறதா?

இந்திய விசாவில் அரசியல் / மத நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகிறதா?  என்று உள்துறை  அமைச்சகத்திற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறி உள்ளார்.

தனது கேள்விக்கு மத்திய உள்துறை தரும் தகவல்களைத் பொறுத்தே, அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள வெளிநாட்டினரை  உடனே நாடு கடத்த வேண்டும் என்றும், அவர்கள் இந்தியாவில் நுழைய தடை விதிக்க வேண்டும் என குடியேற்றத்துறை அதிகாரிகளிடம்  கோரிக்கை விடுக்கப்படும் என்றும் தெரிவித்தவர்,வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்  பாஜகவுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் வகுப்புவாத வெறுப்பு பேச்சுக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here